மத்திய அரசு அனுமதி தராவிட்டால் தடையைமீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம் என ஒன்றிணைந்த கோவை வாழ் மக்கள்


தமிழர் திருநாளாம் பொங்கலையொட்டி தென்தமிழகத்தின் பல ஊர்களில் ஜல்லிக்கட்டு எனப்படும் தமிழர்களின் வீரவிளையாட்டு நடத்தப்படுவது வழக்கம். ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் தொன்மையான விளையாட்டுகளில் ஒன்றாகும். மதுரை அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்றது. இதைக் காண வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமானோர் தமிழகத்துக்கு வருகை தருவர்.



இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் விலங்குகள் நல வாரியம் என்றழைக்கப்படும் பீட்டா அமைப்பு தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்த 2014-ஆம் ஆண்டு மே 7-ஆம் தேதியன்று ஜல்லிக்கட்டுக்கு தடைவிதித்து உத்தரவிட்டது.



இதைத்தொடர்ந்து, இந்த தடையை நீக்கிவிட்டு ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று கூறி தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட லட்சக் கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கடந்த இரண்டு வருடமாக நடத்தமுடியாமல் உள்ள தமிழர்களின் ஜல்லிக்கட்டை இவ்வருடன் நடத்தியே ஆக வேண்டும் என பலரும் முயற்சித்து வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக, வரும் பொங்கல் தினங்களில் ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என ஆதரவு தெரிவித்து கோவை மாவட்டம், அவினாசி சாலையில் அமைந்துள்ள கொடிசியா வளாகத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட கோவை மக்கள் இன்று ஒன்றிணைந்துள்ளனர்.



மத்திய அரசு ஜல்லிக்கட்டை நடத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் தடையை மீறி தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்துவோம், பீட்டாவும், மத்திய அரசு ஜல்லிக்கட்டு விவகாரத்தில் கடைபிடித்து வரும் பிடிவாதத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாரும், முழக்கங்களை எழுப்பியவாரும் இளைஞர்கள் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் புதிய Pre-Incubation Centre மற்றும் Startup Studio தொடக்கம்

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தின் 'கற்பகம் புத்தாக்கம் மற்றும் இன்குபேஷன் கவுன்சில்' (KIIC), தனது புதிய 'Pre-Incubatio...

2016 ஆனைமலை இளைஞர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

ஆனைமலை காவல் நிலையத்தில் குற்ற எண் 369/2016-ன் கீழ் பதிவான கொலை வழக்கில், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பாப்பான் @ சுதானந்தம...

ஜெம் வீரமணி வழக்கு: கோவை காவல் ஆணையர் உள்பட 2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் மற்றும் கூடுதல் ஆணையர் அருண் ஆகிய இரு மூத்த ஐபிஎஸ் அதிகா...

கோவை–போத்தனூர் இடையே பராமரிப்பு பணி: செப்.25, 26-ல் இரு மெமு ரயில் சேவையில் மாற்றம்

செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற...

கோவையில் பார் ஊழியரை கத்தியால் மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது

கோவை புலியகுளம் ரோடு பங்கஜாமில் ரோடு பகுதியில் உள்ள சன்ரிச் 11 - 11 பாரில் ஊழியர் பாண்டியராஜனிடம் இலவச மதுபானம் கேட்டு ம...

கோவை தடாகம் சாலையில் ஆம்புலன்ஸ் பணிமனையில் தீ விபத்து

கோவை தடாகம் சாலையில் உள்ள கோயில்மேடு அருகே ஆம்புலன்ஸ் பணிமனையில் திடீரென தீ பரவியது. இதனால் கரும்புகை மேகங்களாக சுற்றுவட...