வால்பாறை சிறுவர் பூங்கா பகுதியில் உள்ள மரக்கடையில் தீ விபத்து - ஐந்து கடைகள் தீயில் எரிந்து பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசம்


வால்பாறை, சிறுவர் பூங்கா பகுதியில் செயல்பட்டு வந்த சுப்பிரமணியம் என்பவரின் விறகு மற்றும் பிளைவுட் கடையில் இன்று அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. 



இதில் அருகில் இருந்த முத்துமணி என்பவரின் டெய்லர் கடையில் வைத்திருந்த இயந்திரம் மற்றும் பொங்கல் பண்டிகைக்கு வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த துணிகள், பணம் மற்றும் சான்றிதழ்கள்,  அனைத்தும் முற்றிலும் தீக்கிரையானது.



தொடர்ந்து எரிந்த தீ அருகில் இருந்த அகஸ்டின் என்பவரின் டெய்லர் கடையிலும் பரவியுள்ளது. இதில், அந்த கட முழுவதம் எரிந்துள்ளது. தொடந்து, அருகில் இருந்த கலைச்செல்வன் என்பவர் நடத்தி வந்த ஸ்டிக்கர் கடையில் வைக்கப்பட்டிருந்த ஸ்டிக்கரிங் இயந்திரம் மற்றும் கம்ப்யூட்டர் ஆகியவையும் எரிந்து நாசமானது.

 

தீ கொழுந்து விட்டு எரிந்ததைக் கண்டு அருகாமையில் வசிப்பவர்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், தீயணைப்பு வாகனத்தில் போதிய தண்ணீர் இல்லாத காரணத்தால் குறித்த நேரத்தில் தீயை அணைக்க முடியவில்லை. இதனால் பொதுமக்கள் தங்களது வீடுகளில் இருந்த தண்ணீரை கொண்டு வந்து தீயை அணைத்தனர். 

சரியான நேரத்தில் தீயணைப்புத்துறை வந்து தீயை அணைத்திருந்தால் பாதியளவு சேதத்தை குறைத்திருக்கலாம் எனவும் தீயணைப்பு துறையினர் எல்லா நேரங்களிலும் தயாராக இருந்து இதுபோன்ற விபத்துகளின் போது ஏற்படும் சேதங்களில் இருந்து பாதுகாக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டினர். 

இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த வால்பாறை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...