மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்ட குறைந்தபட்ச கூலியை வழங்கக் கோரி துப்புரவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


மாவட்டத்தின் மக்கள் தொகைக்கேற்ப புதிய துப்புரவாளர்களுக்கான பணியிடங்களை உருவாக்க வேண்டும். துப்புரவு தொழிலாளர்களுக்கு மாவட்ட ஆட்சியரால் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச கூலியை அனைத்து துப்புரவு பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சி ஐ டி யு ஊரக உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கோவை தெற்கு தாலூகா அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பட்டத்திற்கு சங்கத்தின் துணைச் செயலாளர் பரமசிவம் தலைமை வகித்தார். இதில், அனைத்து ஊராட்சி அமைப்புகளிலும் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிடவேண்டும். மாவட்டத்தின் மக்கள் தொகைக்கேற்ப புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும். நிரந்திர பணிக்கு ஆட்களை எடுக்கும்போது ஒப்பந்த பணியில் உள்ள ஊழியர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். சமவேலைக்கு சம ஊதியம் என்கிற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அமலாக்கப்படவேண்டும்.

அதேபோல துப்புரவு பணிகளில் ஈடுபடுகிற ஊழியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நிர்ணயம் செய்த குறைந்த பட்ச ஊதியம் நாள் ஒன்றுக்கு 300 ரூபாயை மாநகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட அனைத்துமட்ட ஊழியர்களுக்கும் உடனடியாக வழங்கிட வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

முன்னதாக ஒத்தக்கால்மண்டப பேரூராட்சியில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு முறையாக ஊதியம் தராமல் நிர்வாகம் இழுத்தடித்தது. இதனை கண்டித்து ஊழியர்கள் தொடர் போராட்டத்தை நடத்தினர். இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆட்சியர் அறிவித்த ஊதிய உயர்வோடு வழங்கப்பட்டது. 

இதன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் அப்பகுதி தொழிலாளர்கள் மற்றவர்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் புதிய Pre-Incubation Centre மற்றும் Startup Studio தொடக்கம்

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தின் 'கற்பகம் புத்தாக்கம் மற்றும் இன்குபேஷன் கவுன்சில்' (KIIC), தனது புதிய 'Pre-Incubatio...

2016 ஆனைமலை இளைஞர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

ஆனைமலை காவல் நிலையத்தில் குற்ற எண் 369/2016-ன் கீழ் பதிவான கொலை வழக்கில், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பாப்பான் @ சுதானந்தம...

ஜெம் வீரமணி வழக்கு: கோவை காவல் ஆணையர் உள்பட 2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் மற்றும் கூடுதல் ஆணையர் அருண் ஆகிய இரு மூத்த ஐபிஎஸ் அதிகா...

கோவை–போத்தனூர் இடையே பராமரிப்பு பணி: செப்.25, 26-ல் இரு மெமு ரயில் சேவையில் மாற்றம்

செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற...

கோவையில் பார் ஊழியரை கத்தியால் மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது

கோவை புலியகுளம் ரோடு பங்கஜாமில் ரோடு பகுதியில் உள்ள சன்ரிச் 11 - 11 பாரில் ஊழியர் பாண்டியராஜனிடம் இலவச மதுபானம் கேட்டு ம...

கோவை தடாகம் சாலையில் ஆம்புலன்ஸ் பணிமனையில் தீ விபத்து

கோவை தடாகம் சாலையில் உள்ள கோயில்மேடு அருகே ஆம்புலன்ஸ் பணிமனையில் திடீரென தீ பரவியது. இதனால் கரும்புகை மேகங்களாக சுற்றுவட...