குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியில் 'அங்காடி 2016'


கோவை, சரவணம்பட்டியில் உள்ள குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் வணிகவியல் துறை மாணவர்கள் சங்கம் சார்பில் 'அங்காடி 2016' என்ற இரண்டு நாள் சந்தைப்படுத்துதல் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் இன்று துவங்கியது. இக்கண்காட்சியினை ஸ்வர்கா பவுண்டேஷன் நிறுவனர் சொர்ணலதா தொடக்கி வைத்தார். 



இது குறித்து மாணவர் சங்கம் ஒருங்கிணைப்பாளர் சங்கீதா கூறுகையில், குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியில் மூன்றாவது முறையாக இந்த வருடமும் வணிகவியல் துறை சார்பில் 'அங்காடி' என்னும் தலைப்பில் சந்தைப்படுத்துதல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. 



இந்நிகழ்ச்சி வணிகவியல் துறை மாணவர்களுக்காக நடைபெறுகிறது. மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தில் வணிகத்துறையில் சிறந்து விளங்கவும், முன்னோடியாக திகளவும் இது போன்ற நிகழ்வுகள் உதவியாக இருக்கும். இரண்டுநாள் நடைபெறும் இந்நிகழ்வில் மாணவர்களுக்கு தொழில் துறையில் பல்வேறு வகையில் பயிற்சிகளும் வழங்கப்படுகிறது. இங்கு 30-க்கும் மேற்பட்ட அரங்குகளும், 180 மாணவர்களும் கலந்து இந்நிகழ்வை நடத்துகின்றனர்'' என கூறினார்.



இதில், குமரகுரு தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் குமார், இயக்குநர் விஜிலா கென்னெடி மற்றும் வணிகவியல் துறை மாணவர்கள், மாணவர்கள் சங்கத்தினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கண்காட்சியின் ஒரு பகுதியாக ஐந்து அரங்குகளில் தன்னார்வ அமைப்புகளான பசுமை கோவை சார்பில் மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...