கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு புதிய வடிவில் கேக்குகள் அறிமுகம்!


கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு கோவையில் உள்ள தனியார் கேக் நிறுவனம் இந்த ஆண்டு புதுமையாக மனித உருவ வடிவில் கேக்குகளை செய்யும் பணியை துவங்கி உள்ளனர்.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் கேக் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாட புதிய விதமாக கேக்குகள் தயாரித்து வருகிறது. கடந்த ஆண்டு உருவ படத்தை கேக்குகளை பொறித்தும், குழந்தைகளுக்கு பிடித்த கார்ட்டூன் பொம்மைகளை கொண்டும் தயாரித்தது.



அதேப்போல் இந்த ஆண்டு விருப்பமானவர்களின் உருவத்தை கேக் சிலையாக செய்ய துவங்கி உள்ளது. குறிப்பாக திருமண ஜோடிகள், பிரியமானவர்களின் உருவம், கிருஸ்துமஸ் தாத்தா உருவம் என தயாரித்து வருகின்றனர்.

இந்த மாதிரியான உருவ கேக் சிலைகளை செய்ய 5 ஆயிரம் முதல் இருபதாயிரம் ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், ஆர்டர்  கொடுத்து ஒரு வாரத்தில் விரும்பிய உருவம் கேக் சிலையாக செய்து கொடுக்கப்படும் எனவும் கேக் வடிவமைப்பாளர் சுபஸ்ரீ தெரிவித்துள்ளார்.

அதே போல் சாக்லெட், பிஸ்தா உள்ளிட்ட அனைத்து வகையான கேக்குகளும் செய்து பொதுமக்கள் பார்வைக்கு வைத்துள்ளனர். குறிப்பாக மனித உருவ வடிவ கேக்குகள் பொதுமக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...