கோவையில் தேசிய அளவிலான உற்பத்தியாளர் அபிவிருத்தி மற்றும் கண்காட்சி துவக்கம்


மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகம், கோவை சிட்கோ தொழில்பேட்டை உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்துடன் இணைந்து நடத்தும் தேசிய அளவிலான உற்பத்தியாளர் அபிவிருத்தி மற்றும் கண்காட்சி டிசம்பர் 14, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் பீளமேடு ஸ்ரீ பத்மாவதியம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது. 



இதன் துவக்க விழா இன்று நடைபெற்ற நிலையில், மத்திய அரசின் காயர் போர்டு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார்.



இதைத்தொடர்ந்து, நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், தொழில் வளர்ச்சியில் நாம் வெற்றி பெறுவதற்கு சர்வதேச அளவில் தொழில் வளர்ச்சியை கொண்டு செல்ல வேண்டும். இந்தியா தொழில் வளர்ச்சியில் அதிக விருதுகளை பெற்றுள்ளது. அதில், எம்.எஸ்.எம்.இ மூலம் தமிழ்நாடு ஒன்பது விருதுகள் பெற்றுள்ளது. அதிலும் கோவை மாவட்டம் ஐந்து விருதுகள் பெற்று சிறந்து விளங்குகிறது. 

மேலும், ஏற்றுமதியில் சென்ற ஆண்டு ரூ.1,650 கோடி இருந்தது, இந்த வருடம் ரூ.2000 கோடியை எட்டியுள்ளது. மத்திய அரசு குறு, சிறு தொழிலாளர்களுக்கு பல்வேறு திட்டங்களை செய்து வருகிறது. குறிப்பாக நவீனமயமாக்குதலில் தொழில் முனைவோருக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது'' இவ்வாறு அவர் தெரிவித்தார். 



இக்கண்காட்சியில், கோவை மற்றும் அதன் சுற்றுப்புறமுள்ள 80-க்கும் மேற்பட்ட தொழிலகங்கள் தங்களின் உற்பத்தித்திறனையும், தங்களிடம் உள்ள இயந்திர வசதிகளையும் பட்டியலிடுவதுடன் தங்களின் உற்பத்தித்திறனையும் வெளிப்படுத்த உள்ளனர். 

மேலும் தொழில்நுட்ப வசதிகள் மென்மேலும் வளர்ந்து கொண்டே இருக்கும் இந்த காலகட்டத்தில் நவீன தொழில் நுட்பங்களை உற்பத்தியாளர்களுக்கு அறிவுறுத்திட கோவையைச் சார்ந்த பல தொழில் கல்வி நிறுவனங்கள் இக்கண்காட்சியில் பங்கேற்கிறது. 



இதில், கொடிசியா தலைவர் சுந்தரம், கொசிமா தலைவர் லோகநாதன், துணை தலைவர் சுருளிவேல், தெற்கு ரயில்வே தலைமை பட்டறை மேலாளர் பாஸ்கரன், எம்.எஸ்.எம்.இ கூடுதல் தொழில்துறை ஆலோசகர் சண்முகநாதன், மத்திய மாநில அரசு அதிகாரிகள், தொழில் முனைவோர் மற்றும் கல்வி நிறுவனங்களை சர்ந்தோரும் கலந்து கொண்டனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...