500, 1000 ரூபாய் நோட்டுகள் தடையால் தொடரும் மக்களின் சிரமங்கள்



மத்திய பாஜக அரசு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என திடீர் அறிவிப்பை வெளியிட்டது. அதற்கு மாறாக புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என அறிவிக்கப்பட்டது. 

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, மக்கள் தங்களிடம் உள்ள பழைய தடைசெய்யப்பட்ட 500, 1000 ரூபாயினை மாற்றவும், புதிய ரூபாயினை பெறவும் பெருத்த சிரமத்தினை அன்றாடமும் சந்தித்து வருகின்றனர். 

வங்கிகளிலும், ஏடிஎம் மையங்ளிலும் போதிய பணம் இல்லாததால் பல ஏடிஎம் மையங்கள் பூட்டப்பட்ட நிலையிலேயே காணப்படுகிறது. ஒரு சில ஏடிஎம் மட்டும் திறக்கப்பட்டிருந்தாலும் அதில் நூற்றுக்கணக்கான மக்கள் அலைமோதி வருகின்றனர்.

பொதுமக்கள், தங்களது அன்றாட செலவுகளுக்குக் கூட வழியில்லாமல், அலுவலகம் உள்ளிட்ட தங்களது பணிக்குச் செல்லாமல் வங்கிகளிலும், ஏடிஎம் மையங்களிலும் காத்துக்கிடக்கின்றனர்.

இந்நிலையில், கடந்த சனி, ஞாயிறு மற்றும் செவ்வாய்கிழமை என அடுத்தடுத்து விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்ததால் வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்கள் பணமின்றி மூடப்பட்டன. இதைத்தொடர்ந்து, இன்று வங்கி மற்றும் ஏடிஎம் மையங்கள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து பெரும்பாலான மக்கள் ஏடிஎம் மையத்தில் குவிந்தனர்.





அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டம், ரயில் நிலையம் அருகே உள்ள எஸ்பிஐ தலைமை அலுவலக வங்கியில் ஏராளமான மக்கள் காலை முதலே குவியத்துவங்கினர். வங்கி அலுவலகத்தின் உள்ளே ஏற்பட்ட கூட்டநெரிசலைத் தொடர்ந்து மக்கள் வரிசையாக அந்த வங்கியில் இருந்து சாலை வரையில் நின்று பணப்பரிவர்த்தனை செய்தனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...