மாநகராட்சி ஆணையர் உத்தரவால் அனுமதியற்ற குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு



கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் வடக்கு மண்டலத்தில் உள்ள அனுமதியற்ற குடிநீர் இணைப்புகள் கண்டறியப்பட்டு அந்த குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டும், மின்மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின்படி, வடக்கு மண்டலம், வார்டு எண்- 44, நல்லாம்பாளையம் சாலை, அன்னையப்பன் வீதியில் பிரியா குடிநீர் சப்ளை நிறுவனம் குடிநீர் திருடுவதாக ராமசாமி நகர் 2 குடியிருப்போர் நலச் சங்கத்தினர் புகார் மனு அளித்திருந்தனர்.

அதனடிப்படையில், மாநகராட்சி அதிகாரிகள் அப்பதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முறைகேடாக அனுமதி பெறாமல் தண்ணீர் திருடிவருவது கண்டறியப்பட்டது.

மேலும், அந்த இடத்தில் ஆய்வு செய்யப்பட்டதில் என்.சண்முகம் என்பவர் இரண்டு குடிநீர் இணைப்புகளில் மோட்டர் பொருத்தி தண்ணீர் எடுக்கப்பட்டு வந்தது உறுதியானதையடுத்து, வீட்டு உபயோகத்திற்காக இணைப்பு பெற்று வணிக நோக்கில் பயன்படுத்தியதால் இரண்டு இணைப்புகளும் துண்டிக்கப்பட்டு, மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், சாலையின் குறுக்கே குழாய் பதித்து குடிநீர் வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்திய குழாயும் துண்டிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...