கோவையில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் செயற்குழு கூட்டம்

எஸ்.டி.பி.ஐ கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று காலை போத்தனூர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அக்கட்சியின் மாநிலத் தலைவர் தெகலான் பகாவி தலைமை தங்கினார். மாநில செயலாளர் அப்துல் சத்தார் வரவேற்றார்.



இக்கூட்டத்திற்கு, எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில துணைத் தலைவர்கள் ரபீக் அகமத், அஜ்மத் பாஷா, பொது செயலாளர்கள் நிஜாம் முகைதீன், அப்துல் ஹமீத், செயலாளர்கள் அமீர் ஹம்ஸா, ரத்தினம், எஸ்.டி.டி.யூ மாநிலத் தலைவர் முஹம்மது பாரூக், விம் மாநில தலைவி நஜிமா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:-

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு அதிமுக-விற்கும், தமிழகத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அதிமுக நிர்வாகிகளுக்கும், தமிழக மக்களுக்கும் எஸ்.டி.பி.ஐ கட்சி ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவித்துள்கொள்கிறது. மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத பண மாற்று நடவடிக்கைகளை கண்டித்து தமிழகம் முழுவதும் தொடர் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மதவாத அரசியலுக்கு தமிழகத்தில் இடமளிக்க கூடாது. எஸ்.டி.பி.ஐ-யின் கட்சி வளர்ச்சி நிதி திரட்டப்பட உள்ளது. வர்தா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எஸ்.டி.பி.ஐ கட்சி வரவேற்பளிக்கிறது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...