கல்லூரி பேராசிரியர் வீட்டில் 50 சவரன் நகை கொள்ளை

கோவை அரசு தொழில் நுட்பக்கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிபவர் சேகர். இவரது மனைவி ராணி. இவர்கள் கல்லூரி வளாகத்தில் உள்ள அரசு குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் 27 ம் தேதி திண்டிவனத்தில் உள்ள உறவினர் இறந்ததால் சேகர் தனது குடும்பத்தோடு திண்டிவனம் புறப்பட்டுசென்றார்.  

தொடர்ந்து, இன்று காலை சேகர் மட்டும் வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் கதவு திறந்து கிடந்ததது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த சேகர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 50 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.   

இது தொடர்பாக, சாய்பாபா காலனி போலீசாருக்கு தகவல் தெரிக்கப்பட்டது. தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மோப்ப நாய்கள் மற்றும் கை ரேகை நிபுணர்களின் உதவியோடு தகவல்களை சேகரித்தனர். 

 இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். 

இது தொடர்பாக காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பல நாட்கள் நோட்டமிட்ட பின்னரே இந்த கொள்ளைச் சம்பவம் நடைபெற்றுள்ளது. கல்லூரி வளாகத்தில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு காமிராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார். 

அரசு குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து 50 சவரன் நகை கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியினரிடையே  பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...