கோவையில் தென்னிந்திய அளவிலான ஹயாஸிகா கராத்தே சாம்பியன் போட்டி துவக்கம்

ஹயாஸிகா கராத்தே அமைப்பின் தென்னிந்திய அளவிலான கராத்தே சாம்பியன் போட்டி இன்று கோவையில் தெலுங்குபாளையம் பிரிவில் உள்ள மிட்லேண்ட் ரெசிடென்சியில் நடைபெற்றது. இப்போட்டியில் ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமத்தின் அறங்காவலர் எஸ்.மலர்விழி சிறப்பு விருந்தினராக பங்கேற்று துவக்கி வைத்தார்.



இதுகுறித்து ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமத்தின் அறங்காவலர் எஸ்.மலர்விழி கூறியதாவது:-

உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு விளையாட்டுகளின் பயிற்சிகளில் தினமும் தொடர்ந்து ஈடுபட வேண்டும். விளையாட்டுப் போட்டிகள், கராத்தே போன்ற பல விளையாட்டுப் போட்டிகளில் குழந்தைப் பருவத்தில் இருந்து பங்கேற்க வேண்டும். உடல் வலிமையே மன வலிமையைக் கொடுக்கும். மேலும், ஆரோக்கியமான வாழ்க்கைக்கு கராத்தே போன்ற பயிற்சிகள் மிகவும் உதவும்.



உடல் ஆரோக்கியத்தை நாம் பேணிக்காக்க வேண்டும். இப்பயிற்சிகள் நல்ல உடல் வலிமை, ஆரோக்கியம், சுறுசுறுப்புடன் செயல்பட உதவும். நமது செயல்களில் திறனை மேம்படுத்த பல உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டும்'' என்றார்.



இந்நிகழ்ச்சியில், ஜப்பான் ஹயாஸிகா கோவை அமைப்பின் நிர்வாகி மாதம்பட்டி கே.தங்கவேலு கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இதில், இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் செய்தி ஆசிரியர் மீனாட்சி சுந்தரம், வடிவேலம்பாளையம் வி.பி.காளியப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



ஜப்பான் ஹயாஸிகா கராத்தே இந்திய அமைப்பின் பொதுசெயலர் சென்செய் எஸ்.ரமேஷ் குமார் வரவேற்புரையாற்றினார். இக்கமிட்டியின் மாவட்ட பொறுப்பாளர் நாகராஜ் நன்றியுரையாற்றினார்.



இப்போட்டியில், இந்திய அளவில் மொத்தம் 700 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இதில், வெற்றிபெரும் நபர்களுக்கு அகில இந்திய ஜிம்னாஸ்டிக் அமைப்பின் துணைத் தலைவர் ஏ.பி.முருகானந்தம் தலைமையில் பரிசுக்கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...