அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு ஏடிஎம் இயந்திரத்தில் முழு ஊதியம் வரும்படி மாற்று ஏற்பாடு செய்ய மாவட்ட ஆட்சியரிடம் மனு

பண நோட்டுக்களை மாற்றும் விவகாரம் முடிவுக்கு வரும் வரை ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு ரொக்கமாக ஊதியத்தை வழங்க வேண்டும் எனவும், ஏடிஎம் இயந்திரத்தில் முழு ஊதியம் வரும்படி மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச்சங்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச்சங்கத்தின் தலைவர் ராஜ்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''கருப்புப் பணம் ஒழிப்பு நடவடிக்கையாக தற்போது 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது எனவும், குறிப்பிட்ட காலத்தில் அதனை மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மேலும், 2000 ரூபாய் நோட்டு புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு தற்போது மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. 

ஆனால், நாளொன்றிற்கு 2000 ரூபாய் மட்டுமே ஏடிஎம்களில் எடுக்க முடியும் என்பதால் அரசு ஊழியர்கள் தங்களது பணிகளை விட்டுவிட்டு, விடுப்பு எடுத்து பணத்திற்காக ஏடிஎம் மையங்களில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்த பிரச்சனைகளால் ஒட்டுமொத்தமாக அரசு இயந்திரமே ஸ்தம்பிக்கும் நிலை உள்ளதால் சிறப்பு சலுகையாக இம்மாத ஊதியத்தை மாவட்ட கருவூலங்களில் அரசு ஊழியர்கள் ரொக்கமாக பெற்றுக்கொள்ளவும், ஏடிஎம் இயந்திரத்தில் முழு ஊதியம் வரும்படி மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.

மேலும், வங்கி ஊழியர்கள் தங்களது பணத்தை தாங்கள் பணியாற்றும் வங்கிகளிலேயே மாற்றிக்கொள்ளும் வாய்ப்பு இருப்பதை கருத்தில் கொண்டு இந்த கோரிக்கையை அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று அவர் கூறினார்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...