மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து கோவையில் ஏ.டி.எம் இயந்திரம் முன்பாக மலர் வளையம் வைத்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்!


மத்திய அரசு 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை தகுந்த முன்னேற்பாடுகள் இல்லாமல் தடை செய்தது காரணமாக பொதுமக்களும் வியாபாரிகளும் அவதிக்குள்ளாகி இருப்பதாக கூறி மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து கோவையில் ஏ.டி.எம் இயந்திரம் முன்பாக மலர் வளையம் வைத்து போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினர்   90 பேர் கைது செய்யப்பட்டனர்.



மத்திய அரசு கடந்த 8ம் தேதி 500 ரூபாய்,1000 ரூபாய் நோட்டுகளை முடக்கியதால் பொது மக்களும், தொழில் முனைவோரும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து கோவையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எஸ்.பி.ஐ வங்கி முற்றுகை போராட்டம் நடைபெற்றது.



கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் வி.எம்.சி.மனோகரன் தலைமையில் ஓன்று கூடிய காங்கிரஸ் கட்சியினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஓன்று கூடினர். அங்கிருந்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பிய அவர்கள் ஊர்வலமாக சென்று எஸ்.பி.ஐ வங்கியை நோக்கி செல்ல முயன்றனர். போலிசார் அனுமதி மறுக்கவே மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக உள்ள எஸ்.பி.ஐ ஏ.டி.எம் மையத்திற்கு மலர் வளையம் வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது கருப்பு பணத்தை ஓழிக்க மேற்கொண்ட நடவடிக்கை வரவேற்க தக்கது என்றாலும் சரியான திட்டமிடல் இல்லாததால் பொது மக்களும், வியாபாரிகளும் கடும் அவதிக்குள்ளாகி இருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டினர். தற்போது நிலவும் பண தட்டுப்பாட்டை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

இதனையடுத்து எஸ்.பி.ஐ தலைமை அலுவலகம் நோக்கி செல்ல முயன்ற காங்கிரஸ் கட்சியினர் 90 பேரை  காவல் துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.



Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...