சசி கிரியேட்டிவ் ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் சார்பில் ஓவியப் போட்டி

சசி கிரியேட்டிவ் ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் கோவையில் அமைந்துள்ள ஒரு முன்னணி கட்டிட வடிவமைப்பு கல்லூரி ஆகும். இதன் சார்பாக 5ம் ஆண்டு ''சித்திரம் 2016'' என்னும் ஓவியப் போட்டி நடைபெறவுள்ளது.

இந்தியாவின் விழாக்கள் என்னும் தலைப்பில் வரும் நவம்பர் 22ம் தேதியன்று காலை 9.30 மணி முதல் பகல் 3.30 மணி வரை அக்கல்லூரி வளாகத்தில் இப்போட்டி நடைபெற உள்ளது. இதில், தமிழ்நாடு மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் 350க்கும் மேற்பட்ட கல்லூரிகள் பங்குபெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போட்டிக்கான சிறப்பு விருந்தினராக கலை ஹவுஸ் செயல்திட்ட மேலாளர் பிரிஜெட் சிபு பங்குபெற உள்ளார். சசி கிரியேட்டிவ் ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சரின் நிறுவனர் ஆர்.சுவாமிநாதன், அவரது மனைவி ராஜலட்சுமி சுவாமிநாதன், அரங்காவலர் சுச்சி ராஜ்தீபன் உள்ளிட்டோர் இதில் கலந்துகொள்ள உள்ளனர். பேராசிரியர் முகமது அலி சாரிப் இப்போட்டிக்கு தலைமை தாங்க உள்ளார்.

மாணவர்களின் படைப்புகள் நிபுனர் குழுவால் மதிப்பிடப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. ஓவியப் போட்டிகள் மட்டுமின்றி மலர்களைக் கொண்டு ஓவியம் உண்டாக்குதல், துணிகளுக்கு வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட போட்டிகளும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...