மாற்றுத்திறனாளி பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிக்களில் உற்சாகத்துடன் பங்கேற்ற மாணவர்கள்

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் சார்பில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளி பள்ளி மாணவர்களுக்கான முதல் சுற்று விளையாட்டுப் போட்டிகள் கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் வெள்ளியன்று (இன்று) துவங்கியது.



இதில், கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட 450-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மாற்றுத்திறனாளி மாணவர்கள், பார்வை குறைபாடு உள்ளவர்கள், மூளை வளர்ச்சி குன்றியவர்கள், காது கேளாதோர் என நான்கு பிரிவுகளாக விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.

14 வயதுக்கு உட்பட்ட 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 50 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டி, ஸ்டாண்டிங் பிராட் ஜம்ப், டென்னிஸ் பந்து எறிதலும், 17 வயதுக்கு உட்பட்ட 9 மற்றும் 10-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் மற்றும் 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இதே பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது.

மாற்றுத்திறனாளி மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிபடுத்த ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு பங்கேற்றது பார்வையாளர்களை பரவசப்படுத்தியது. இப்போட்டிகளைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட போட்டிகள் வரும் டிசம்பர் மாதம் நடைபெறுகிறது.

இப்போட்டியில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கபடவுள்ளதாக இடைநிலைக் கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...