குறிச்சி அரவான் கோவில் திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து பாதைகள் மாற்றம்

கோவை மாவட்டம், போத்தனூர் குறிச்சி பிரிவு அருகில் உள்ள அரவான் கோவிலில் வருகிற 18ம் தேதியன்று (வெள்ளி) திருவிழா நடைபெற உள்ளதால் அன்றைய தினம் காலை 11 மணி முதல் பகல் 2 மணிவரை கீழ்கண்டவாறு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.

1) கோவை உக்கடத்திலிருந்து பொள்ளாச்சி மார்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் பிற வாகனங்கள் ஆத்துபாலம் வழியாக போத்தனூர் குறிச்சி பிரிவில் இடதுபுறம் திரும்பி போத்தனூர் கடைவீதி வழியாக இரயில்வே கல்யாண மண்டபம், சாரதா மில் ரோடு, தக்காளி மார்கெட் வழியாக பொள்ளாச்சி சாலையை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

2) பொள்ளாச்சியிலிருந்து கோவை உக்கடம் நோக்கி வரக்கூடிய கனரக வாகனங்கள் அனைத்தும் ஈச்சனாரி மஹாலட்சுமி கோவில் சந்திப்பிலிருந்து இடதுபுறம் மதுக்கரை மார்க்கெட் ரோடு சென்று பிள்ளையார்புரம் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி சுகுணாபுரம் பாலக்காடு சாலை வழியாக ஆத்துபாலம் வந்து செல்லவேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

3) பொள்ளாச்சி ரோட்டிலிருந்து கோவை உக்கடம் நோக்கி வரக்கூடிய இலகு மற்றும் இருசக்கர வாகனங்கள் அனைத்தும் பொள்ளாச்சி ரோடு எல்ஐசி காலனி சந்திப்பில் இடதுபுறம் திரும்பி மதுக்கரை மார்க்கெட் ரோடு வந்து மாச்சாம்பாளையம் ரோட்டில் இடதுபுறம் திரும்பி ஞானபுரம் பாலக்காடு ரோடு சந்திப்பு வந்து செல்லவேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...