முதுகு வலியால் பாதிக்கப்பட்டவர் கேஎம்சிஎச் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றப்பட்டார்

கோவையில் செயல்பட்டு வரும் கேஎம்சிஎச் மருத்துவமனையில் குமாரசாமி (50) என்பவர் கடும் முதுகு வலியின் காரணமாக கடந்த அக்டோபர் 22ம் தேதியன்று அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதித்த இருதய மருத்துவர் ஆர்.சுரேஷ் குமார், குமாரசாமியின் இருதயத்திலிருந்து வெளிவரும் இரத்தக் குழாயில் விரிசல் ஏற்பட்டிருப்பதைக் கண்டறிந்தார்.

இதனைத்தொடர்ந்து, நடைபெற்ற பரிசோதனையில், அந்த விரிசல் மூளை, கல்லீரல், இடது சிறுநீரகம் மற்றும் குடலுக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய்கள் வரை பரவி இருப்பதும், உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படுவது உறுதி என கேஎம்சிஎச் இருதய- நுரையீரல் அறுவை சிகிச்சைப் பிரிவின் இயக்குநர் பிரசாந்த் வைஜயநாத் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து குமாரசாமிக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சைக்குப் பின் அவரது உடல் நலம் இயல்பு நிலைக்கு திரும்பியது.

இந்த ஆண்டு மட்டும் இதுபோன்ற 10 அறுவை சிகிச்சைகள் நூறு சதவிகிதம் வெற்றியுடன் செய்யப்பட்டுள்ளன என்று கேம்எம்சிஎச் மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் நல்லா ஜி.பழனிசாமி தெரிவித்தார்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...