மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கூட்டுறவு வங்கிகளுக்கு பணம் வழங்காத மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு கூட்டுறவு வங்கி பணியாளர்கள் கோவை தலைமை அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். பணம் வழங்காததால் கூட்டுறவு வங்கிகள் மேல் விவசாயிகளுக்கு உள்ள நம்பிக்கை குறைய வாய்ப்பு உள்ளதாக குற்றம் சாட்டி உள்ளனர்.



தமிழக அரசு கட்டுப்பாட்டில் தமிழகம் முழுவதும் நான்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூட்டுறவு வங்கிகள் இயங்கப்பட்டு வருகிறது, கோவை மாவட்டத்தை பொருத்தவரை 276 கூட்டுறவு வங்கிகள் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிகளில் பெரும்பாலும் கிராமப்புற விவசாயிகளே அதிக பயனாளர்களாக உள்ளனர். இந்நிலையில் கடந்த 9ம் தேதி முதல் 500-1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இதனால் மாநில அரசின் கீழ் இயங்கி வரும் கூட்டுறவு வங்கிகள் மத்திய வங்கியில் செலுத்திய பணத்தை மீண்டும் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் கூட்டுறவு வங்கிகளில் பணம் செலுத்திய விவசாயிகள் பணத்தை எடுக்க முடியாமலும், விவசாய நகை கடன், உள்ளிட்ட கடன்களை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. போதுமான அளவு பெரிய தொகை வழங்க முடியாது என மத்திய வங்கி தெரிவித்துள்ளதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாகவும், இதனால் உடனடியாக கூட்டுறவு வங்கி செலுத்திய பணத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர் சங்கத்தினர் கோவையில் உள்ள தலைமை அலுவலகத்தில் 300 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

Severe Traffic Congestion in Coimbatore’s Madukkarai Sparks Urgent Plea to Expedite Railway Overbridge Work

Severe traffic congestion in Madukkarai is causing hardship to residents and Kerala-bound commuters. Delayed railway ove...

கோவை மாநகராட்சி குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 86 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செப்டம்பர் 22, 2026 அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மேயர் ரங்...

கூடலூர் நகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு ஆய்வு; தனியார் நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலூர் நகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏஇடியிஎஸ் கொசுக்களின் உற்பத்தி...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப். 24-ல் நேரடி மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தனியார் இணைப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள இளமறிவியல் இடங்களை நிரப்ப நேரடி மாணவர...

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம்

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ப...

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...