ரூ.40 ஆயிரம் கேட்டு இளைஞரைக் கடத்திய கும்பலை காவல்துறை கைதுசெய்து விசாரணை


கோவை மாவட்டம், பீளமேடு பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். அதேப்பகுதியில் செயல்படும் தனியார் பொறியியல் கல்லூரியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் விஷ்ணு, அதேக் கல்லூரியில் உணவு விடுதியில் பணியாற்றி வருகிறார். 

இந்நிலையில், வியாழனன்று மாலை பணி முடிந்து தனித்தனி வாகனத்தில் இருவரும் வீட்டிற்கு திரும்பியுள்ளனர். சண்முகம் வீட்டிற்கு வந்துவிட்ட நிலையில், விஷ்ணு நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனிடையே, மர்ம நபர்களிடம் இருந்து தொலைபேசியில் அழைப்பு வந்துள்ளது. அப்போது அவர்கள், விஷ்ணுவை கடத்தியிருப்பதாகவும், 40 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் இல்லையென்றால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டியுள்ளனர். அதற்கு நாளை அந்தப் பணத்தினை தந்துவிடுவதாக சண்முகம் கூறியுள்ளார். தொடர்ந்து, பீளமேடு காவல் துறையினருக்கும் ரகசியத் தகவல் தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, இன்று மர்ம கும்பல் கூறிய இடத்திற்கு சண்முகம் சென்றார். காவல் துறையினரும் பின்தொடர்ந்து சென்றுள்ளனர். காவலர்களைக் கண்ட மர்மகும்பல் விஷ்ணுவை காரில் இருந்து கீழே தள்ளிவிட்டு தப்பிச் சென்றனர். இதையடுத்து, விஷ்ணு கூறிய அடையாளம் மற்றும் ஆதாரத்தின் அடிப்படையில் காவல் துறையினர் 5 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ள வீடியோப் பதிவையும் சோதனையிட்டு வருகின்றனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...