ஒரேநாளில் ரூ.480 கோடி புதிய நோட்டுகள் வினியோகம்: ரிசர்வ் வங்கி

சென்னை: பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளுக்கு பதில் ஒரேநாளில் ரூ.480 கோடி புதிய நோட்டுகள் வினியோகம் செய்யப்பட்டதாக ரிசர்வ் வங்கி மண்டல இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கி மண்டல இயக்குனர் சதக்கத்துல்லா சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், பொதுமக்கள் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள வசதியாக ரிசர்வ் வங்கியில் 4 சிறப்பு கவுன்ட்டர்களுடன் மொத்தம் 8 கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. ரிசர்வ் வங்கியில் இருந்து தமிழகத்துக்கு 270 பெட்டிகளில் ஒரு பெட்டிக்கு ரூ.20 கோடி வீதம் ரூ.5,400 கோடி வந்துள்ளது.

இதில் நேற்று மட்டும் வங்கிகள், தபால் நிலையங்கள் மூலம் ரூ.480 கோடி மதிப்பிலான புதிய நோட்டுகள் வினியோகிக்கப்பட்டுள்ளது. ஏ.டி.எம்.களில் இன்று முதல் ஒருவர், அதிகபட்சமாக ரூ.2,000 வரை பணம் எடுக்கலாம் என தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...