திமுக பொருளாளர் ஸ்டாலின் முன்னிலையில் 40 தா.ம.க நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.


கோவை தனியார் ஹோட்டல் அரங்கில் திமுக பொருளாளர் ஸ்டாலின் முன்னிலையில் தா.ம.க நிர்வாகிகள் 40க்கும் மேற்பட்டோர் இன்று மாலை திமுகவில் இணைந்தனர்.

திமுக பொருளாளர் ஸ்டாலின் இன்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார்.கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டல் அரங்கில் நடந்த சிறிய விழாவில் அவர் கலந்து கொண்டார்.தா.ம.கவில் இருந்து விலகிய அக்கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் 40 பேர் திமுகவில் ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தனர்.அவர்களை ஸ்டாலின்  கைகுலுக்கி வரவேற்றார். நாளை காலை திமுக நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் பங்கேற்கும் ஸ்டாலின் பின்னர் திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள இரத்த வங்கியை திறந்து வைக்கின்றார்.பின்னர் கோவையை அடுத்த காரமடை பகுதியில் புறநகர் மாவட்ட திமுக ஏற்பாடு செய்துள்ள விழாவில் ஸ்டாலின் பங்கேற்கின்றார். இதில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் திமுகவில் இணையவுள்ளனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...