இந்திய விமானப் படையின் சார்பில் இந்துஸ்தான் கல்லூரியில் கண்காட்சி நிகழ்ச்சி


இந்திய விமானப் படையின் சார்பல் "தி கார்டியன்ஸ் ஆப் தி ஸ்கை" என்ற கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவையில் அமைந்துள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில், இந்திய விமானப் படையில் ஆட்கள் தேர்வு முறை, அதில் சேர்வதற்கான வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 



இதனைத்தொடர்ந்து, விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மண்டலம், அனுபவம் மற்றும் தகவல் மண்டலம் உள்ளிட்டவை குறித்து மாணவர்களுக்கு செய்முறை விளக்கம் காண்பிக்கப்பட்டது. இதுகுறித்து விங் கமேண்டர் சங்கீதா நமது நிருபரிடம் கூறியதாவது:-

இந்நிகழ்ச்சி நடத்தியதற்கான முக்கிய நோக்கம் மாணவ, மாணவிகளிடையே இந்திய விமானப்படையின் மீதுள்ள ஆர்வத்தை தூண்டவும், ஊக்குவிப்பதுமாகும். இதுகுறித்த முழுமையான விழிப்புணர்வை அவர்களிடம் ஏற்படுத்த வேண்டும். அனைத்துத் தரப்பினரிடமும் இதனைக் கொண்டுசேர்க்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.



இதைத்தொடர்ந்து, மாணவர்கள், விமானப் படையில் சேர்வதற்கான தேர்வு முறைகள், தகுதி, விதிமுறைகள் உள்ளிட்டவை குறித்து கேட்டுத் தெரிந்துகொண்டனர். பின், இந்திய விமானப் படையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விமானப் போக்குவரத்து உள்ளிட்டவை அடங்கிய பேருந்தினை பார்வையிட்டனர். இதில், விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டுக் கருவி, உபகரணம், மேற்கொள்ளும் வழிமுறைகள் உள்ளிட்டவைகள் கண்காட்சிப் படுத்தப்பட்டன.படுத்தப்பட்டன. 



இதனைத்தொடர்ந்து அருகில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் இந்திய விமானப் படையின் கண்காட்சி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், இந்த கண்காட்சி மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. இதன் மூலம் விமானப் படையில் சேர்வதற்கான ஊக்கம் ஏற்பட்டுள்ளது. கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த விமானக் கட்டுப்பாட்டுக் கருவிகளை இயக்கியது நல்ல அனுபவத்தை ஏற்படுத்தியது என்றனர்.



இந்நிகழ்ச்சியில், விமானப்படை நிர்வாகக் கல்லூரி ஏர் விங் கமேன்டர் பி.கனேசன், அணித் தலைவர் கல்பனா குமாரி, பெங்களுரில் இருந்து அணித் தலைவர் நிசாந்த் தீக்சித், விமானப்படை நிர்வாகக் கல்லூரி இளைஞர் வாரண்ட் அதிகாரி சாகு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப். 24-ல் நேரடி மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தனியார் இணைப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள இளமறிவியல் இடங்களை நிரப்ப நேரடி மாணவர...

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம்

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ப...

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...