டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் மாநகராட்சி வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து ஆணையர் ஆய்வு

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பரவிவரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்தும் விதமாக மாநகராட்சியின் சார்பில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



அதன் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி 79வது வார்டுக்கு உட்பட்ட தடாகம் சாலை, இராயப்பபுரம் தெருவில் மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு, வீடாகச் சென்று அபேட் மற்றும் குளோரின் மருந்தை தண்ணீர் தொட்டிகளில் ஊற்றுவதையும், தேவையற்றப் பொருட்களை அகற்றுவதையும் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் பார்வையிட்டார்.



இதனைத்தொடர்ந்து, லாலி சாலையில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் மூலம் புதிதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தினை பார்வையிட்டார். பின், பொன்னைய்யாராஜபுரம், ஏ.கே.எஸ்.நகர் பகுதியில் வீடுகளுக்கு செல்லும் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் பணிகளில் ஈடுபடுவதை விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார்.



இதனைத்தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள முத்தண்ணன் குளத்தை மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருவதை பார்வையிட்டார். மேலும், தெலுங்கு வீதியில் ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் வாரியம் நடைபெற்று வரும் இடத்தினையும் ஆய்வு செய்தார்.



இந்நிகழ்வுகளின் போது மாநகராட்சி நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், தெற்கு மண்டல உதவி ஆணையர் (பொ) ரவி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.



Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப். 24-ல் நேரடி மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தனியார் இணைப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள இளமறிவியல் இடங்களை நிரப்ப நேரடி மாணவர...

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம்

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ப...

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...