பள்ளி மாணவன் உட்பட இருவர் மாயம்

கோவை மாவட்டம், ராயப்பாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோ. இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களது மகள் லோகவாணி (18). இவர் செவ்வாயன்று காலை வீட்டில் இருந்து வெளியில் சென்றுள்ளார். பின் இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மகாலட்சுமி ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத்தொடர்ந்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கிட்டுசாமி. இவருக்கு முருகேசன் மற்றும் ராஜேந்திரன் (32) என்ற இரு மகன்கள் உள்ளனர். ராஜேந்திரனுக்கு கடந்த 6 மாதம் முன்பு ஜானகி என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியில் சென்ற ராஜேந்திரன் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதுகுறித்து, அவரது அண்ணன் முருகேசன் பெரியநாயக்கன்பாளைய காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததைத்தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேப்போன்று ஆனைமலைப் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ், பிரியா தம்பதியரின் மகன் தன்ராஜ் (14). விடுதியில் தங்கி தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில் செவ்வாயன்று காலை விடுதி காப்பாளர் தன்ராஜின் அறைக்குச் சென்று பார்த்தபோது அங்கு அவர் இல்லாததைக் கண்டு பெற்றோர்க்கு தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, ஆனைமலை காவல் நிலையத்தில் பிரியா புகார் அளித்ததைத்தொடர்ந்து காவல் துறையினர் வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப். 24-ல் நேரடி மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தனியார் இணைப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள இளமறிவியல் இடங்களை நிரப்ப நேரடி மாணவர...

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம்

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ப...

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...