வங்கி ஊழியர் மனைவி சாலை விபத்தில் பலி

கோவை இருகூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. வெரைட்டிஹால் சாலையில் செயல்பட்டு வரும் இந்தியன் வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி காந்திமதி (43) தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் புதனன்று (இன்று) காலை அலுவலகம் செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் இருவரும் சென்றுள்ளனர். அவிநாசி சாலை உள்ள அண்ணாசிலை அருகே சென்றுகொன்றிருந்த போது பழனிச்சாமியின் வாகனத்தின் மீது 2ம் எண் கொண்ட தனியார் பேருந்து மோதியுள்ளது. இதில் நிலைதடுமாறி காந்திமதி கீழே விழுந்தநிலையில் பேருந்து அவரது தலையில் ஏறியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே காந்திமதி பலியானார்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்துக்கு புலனாய்வு பிரிவு (கிழக்கு) காவல் துறையினர் உடலை மீட்டு கோவை அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...