தமிழகத்தில் பறவை காய்ச்சல் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை


பறவை காய்ச்சல் நோய் பரபுவதை தடுக்க கோவை மாவட்டத்தில் 12 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு, கேரள மாநிலத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் மருந்து தெளிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. கேரளாவில் இருந்து வாத்து, கோழி, முட்டை ஏற்றி வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன.

கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியில் பறவை காய்ச்சல் நோய் பரவி உள்ளதை தொடர்ந்து, தமிழகத்தில் பறவை காய்ச்சல் பரவுவதை தடுக்க கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். கோவை மாவட்டத்தில் வாளையாறு, வேலாந்தவளம், ஆனைக்கட்டி உள்ளிட்ட 12 பகுதிகளில் பறவை காய்ச்சல் நோய் தடுப்பு சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கேரள மாநிலத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினி மருந்து தெளித்த பின்னரே தமிழகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றன. மேலும் கேரள மாநிலத்த்தில் இருந்து வாத்து, கோழி, முட்டை உள்ளிட்டவை ஏற்றி வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன. கோவை கோட்டத்தில் 5 சோதனைச்சவடிகளும், பொள்ளாச்சி கோட்டத்தில் 7 சோதனைச்சாவடிகளும் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், பறவை காய்ச்சல் பரவுவதை தடுக்க கால்நடை பராமரிப்பு துறையினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் தமிழ்செல்வன் தெரிவித்தார். மேலும் அனைத்து சோதனைச்சாவடிகளிலும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், மருந்துகள் தேவையான அளவு கையிருப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். கோவை மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளும் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், நோய் தாக்கத்திற்கான அறிகுறிகள் தென்பட்டால் கால்நடை பராமரிப்பு துறையினருக்கு தெரியப்படுத்துமாறு அறிவுறுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...