வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள கோவை மாவட்டம் தயார்- ஆட்சியர்

வடகிழக்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கடந்த செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 7ம் தேதி கோவை மாவட்டத்திற்குட்பட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, தீயணைப்பு மற்றும மீட்புப் பணிகள் துறை, பொதுசுகாதாரத்துறை, கால்நடை உள்ளிட்ட பல துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டார்.

இதில், கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக ஏற்படும் வெள்ளப்பெருக்கின் போது 31 இடங்கள் பாதிப்புக்குள்ளாகக் கூடிய இடங்கள் என கண்டறியப்பட்டுள்ளது. இந்த இடங்களில் மண்டலக்குழு, முன்னெச்சறிக்கை குழு, தேடுதல் மற்றும் மீட்புக் குழு, வெளியேற்றும் குழு, நிவாரண முகாம் குழு உள்ளிட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் 1077 என்ற அழைபேசி வசதியுடன் அவசரப் பணி மையம் அமைக்கப்பட்டுள்ளது. 

கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவக்காற்று மழையினால் வெள்ள பாதிப்புகள் ஏதேனும் ஏற்பட்டால் பொதுமக்கள், கால்நடைகள் மற்றும் சொத்துக்களை பாதுகாக்கும் வகையில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...