சர்தார் வல்லபாய் பட்டேல் ஜெயந்தி விழா


கோவையில் செயல்பட்டு வரும் சர்தார் வல்லபாய் பட்டேல் பன்னாட்டு ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரியில் திங்களன்று (இன்று) சர்தார் வல்லபாய் பட்டேல் ஜெயந்தி விழாவும், லஞ்ச ஒழிப்பு வார விழாவும் கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக தேசிய ஜவுளித் துறை நிர்வாக இயக்குநர் அருள்சாமி கலந்து கொண்டார். தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழியேற்ற மாணவர்களிடையே அருள்சாமி பேசுகையில் ''தேசம், நாடு, மக்கள் என்று வரும் போது நலத்துடன் ஒற்றுமையுடன் செயல்பட்டு சர்தார் வல்லபாய் பட்டேலின் எண்ணங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். வளர்ந்துவரும் இளைஞர் சமுதாயம் லஞ்சம் கொடுக்கவும் கூடாது, வாங்கவும் கூடாது. இந்த நாட்டில் எல்லா வளங்களும் உள்ளன. அவற்றினை முறையாக பயன்படுத்தி சமுதாக வளர்ச்சிக்கு உதவ வேண்டும். இந்தியா வல்லரசாகவும், நல்லரசாகவும் விளங்க ஒவ்வொருவரும் பங்களிக்க உறுதிமொழி ஏற்க வேண்டும்'' என்று கூறினார்.



மேலும், இவ்விழாவில் பங்குபேற்ற அனைவரும் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து, மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அனைவரும் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து, மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.



இவ்விழாவில் கல்லூரி இயக்குநர் முனைவர் சி.ரமேஷ்குமார் மற்றும் பேராசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...