கோவையில் குவிந்த கேரள மருத்துவக் கழிவுகள்- 4 பேர் மீது வழக்கு


கோவை மாவட்டம், எட்டிமடையைச் சேர்ந்தவர் விவசாயி செல்லப்பகவுண்டர் (75). இவர் அப்பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்தில் ஒரு பகுதியில் தக்காளியினை பயிரிட்டுள்ளார். மற்றொரு பகுதி தரிசு நிலமாக விடப்பட்டிருந்துள்ளது. இதனை கடந்த மாதம் கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த முகமது இலியாஸ் (50) என்பவர் பிளாஸ்டிக் தரம் பிரிக்கும் நிறுவனம் அமைப்பதாகக் கூறி குத்தகைக்கு எடுத்துள்ளார். இதனை கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த ஷாஜியும், சதிரும் நிர்வகித்து வந்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து கடந்த ஒரு மாதமாக இரவு நேரங்களில் கேரளத்தில் இருந்து ஏராளமான மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரிகள் தொடர்ந்து வந்துள்ளன. மேலும், அப்பகுதி முழுவதும் கடுமையான துர்நாற்றமும் வீசியுள்ளது. இதனால் அப்பகுதி மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், திங்களன்று அதிகப்படியான மூட்டைகளை ஏற்றிக்கொண்டு அப்பகுதிக்கு வந்த 24 லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

இதுகுறித்து தகவலறித்து அப்பகுதிக்கு வந்த மதுக்கரை வட்டாட்சியர் சிவசங்கர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த லாரிகளில் கேரள மாநிலத்திற்கு உரிய கதிர்வீச்சு அபாயம் நிறைந்த மருத்துவக் கழிவுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அப்பகுதியில் கொட்டிவைக்கப்பட்டிருந்ததும் மருத்துவக் கழிவுகள் என தெரியவந்தது. இதையடுத்து, அந்த லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வந்த கே.ஜி. சாவடி காவல் துறையினர் நில உரிமையாளர் செல்லப்ப கவுண்டர், முகமது இலியாஸ், ஷாஜி, சதிர் ஆகிய நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...