வாகனங்களை நிறுத்த தனியார் ஸ்டேண்டுகள் அமைத்து தர வேண்டும் - ஓட்டுநர்கள் கோரிக்கை

கோவை மாவட்டம் வால்பாறையில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவதால் அங்குள்ள ஆட்டோ மற்றும் வாடகை கார்கள் நிறுத்த ஸ்டேண்டுகள் அமைத்து தர வேண்டும் என ஓட்டுநர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவை மாவட்ட வால்பாறை பகுதிகள் அதிகளவு சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் முக்கிய பகுதியாக உள்ளது. குறிப்பாக விடுமுறை காலங்களில் வழக்கத்தை விட அதிகமான அளவு பயணிகள் வரவு அதிகரிக்கும். பொதுவாக இங்கு வரும் சுற்றுலா பயணிகள் வாடகை கார்கள் மற்றும் ஆட்டோக்களையே பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக வால்பாறையில் மொத்தம் 80 ஆட்டோக்கள் மற்றும் 70 க்கும் மேற்பட்ட வாடகை கார்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வாடகை வாகனங்களை நிறுத்த தனியாக ஸ்டேண்டுகள் இல்லாததால் சாலைகளில் நிறுத்த வேண்டிய நிலை உள்ளது. 

இதனால் பொதுக்கூட்டங்கள் மற்றும் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாக கூறி சில நேரங்களில் சாலையில் உள்ள ஆட்டோ மற்றும் கார்களை அகற்ற காவல் துறையினர் நிர்பந்தம் செய்வதால் இவர்களின் அடிப்படை வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்க கூடிய அவலம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாடகை வாகனங்களை நிறுத்த தனியார் ஸ்டேண்டுகள் அமைத்து தர வேண்டும் என ஓட்டுநர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். குறிப்பாக நகராட்சியின் முக்கிய பகுதியான பேருந்து நிலையங்களுக்கு அருகே அமைத்து தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். பொதுவாக வால்பாறையை சுற்றுலா பகுதியாக அறிவிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். அதே நேரத்தில் சுற்றுலா பயணிகள் வரத்தும் குறைந்து வருவதும் வாடகை வாகன ஓட்டிகளுக்கு பின்னடைவாக தான் பார்க்க முடிகிறது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...