காவிரி விவகாரம்: கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினர்



காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், இதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவிப்பதைக் கண்டித்தும் தமிழகத்தில் அதிமுக, பாஜக-வைத் தவிர பல்வேறு கட்சியினர், விவசாய சங்கத்தினர் கடந்த சில நாட்களாக ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதன் ஒரு பகுதியாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்தோர் வெள்ளியன்று (இன்று) கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.





இதுகுறித்து, போராட்டத்தில் பங்கேற்ற வீரத்தமிழர் முன்னணியின் மண்டல பொருளாளர் அருண் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''தமிழகத்திற்கு காவிரி நீரை விடக்கூடாது என்பதில் கர்நாடக அரசை விட மத்திய பாஜக அரசு மும்முரமாக உள்ளது. கடந்த 2007ல் இருந்து காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான வழக்கு நடைபெற்று வரும் நிலையில், உச்ச நீதிமன்றம் இதுகுறித்து உத்தரவிட அனுமதியில்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது. நடுநிலையாக செயல்படுவதாகக் கூறி உறுதிமொழியேற்ற மத்திய அமைச்சர்கள் தற்போது கர்நாடகம் பக்கம் சாய்ந்து விட்டனர். 





உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால், மத்திய அரசு அலுவலகங்களை பூட்டு போட்டும், வரி கொடுக்காத போராட்டமும் நடத்துவோம்'' என்று அவர் கூறினார்.



இதனைத்தொடர்ந்து, ரயில் நிலைய முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உட்பட 54 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.





Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...