மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு: வெளியில் தெரியும் நந்தி சிலை

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம் மளமளவென சரிவதால், நீர்பரப்பு பகுதியிலுள்ள நந்தி சிலை, நேற்று பாதிக்கு மேல் வெளியில் தெரிந்தது. சேலம் மாவட்டம், மேட்டூர் அணை, பண்ணவாடி நீர்பரப்பு பகுதியில் மூழ்கியுள்ள, ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி சிலை, கிறிஸ்தவ ஆலயத்தின் ஒற்றை கோபுரம் ஆகியவை, நீர்மட்டம் குறையும் போது வெளியே தெரியும். குறிப்பாக, 70 அடியாக சரியும்போது, நந்தி சிலை முகப்பு வெளியில் தெரியும். டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு, 12 ஆயிரம் கனஅடி நீர் திறப்பதால், மேட்டூர் அணை நீர்மட்டம் மளமளவென சரிகிறது. நேற்று நீர்மட்டம், 64.65 அடியாகவும், நீர் இருப்பு, 28.27 டி.எம்.சி.,யாகவும் சரிந்ததால், நீர்பரப்பு பகுதியிலுள்ள நந்தி சிலை, பாதிக்கு மேல் வெளியில் தெரிந்தது, விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியது.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...