காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி ரயில் மறியல் - ஸ்டாலின் கைது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் நோக்கி பேரணியாக சென்ற திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான திமுக உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம் நடத்த விவசாய சங்கத்தினர் அழைப்புவிடுத்திருந்தனர். இந்த மறியல் போராட்டத்திற்கு அதிமுக, பாஜக தவிர மற்ற அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருந்தனர். 

அதன்படி, காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என வலியுறுத்தி 48 மணி நேர தொடர் ரயில் மறியல் போராட்டம் திங்களன்று (இன்று) தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர், விவசாயிகள், வணிகர்கள் ஆகியோர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் தலைமையில் மேற்கு மாம்பலம் ரயில் நிலையத்திலும், சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் தலைமையில் சைதாப்பேட்டை தேரடி ரயில் நிலையத்திலும், சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் தலைமையில் கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்திலும், சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு தலைமையில் பெரம்பூர் ரயில் நிலையத்திலும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், பெரம்பூரில் நடைபெற்று வரும் போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டவாறு ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். 

இதனைத்தொடர்ந்து, அப்பகுதியில் குவிக்கப்பட்டிருந்த காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர்கள் சேகர்பாபு, ரெங்கநாதன் உள்பட ஆயிரக்கணக்கான திமுகவினரை கைது செய்தனர்.

Newsletter

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...