இலவச வீட்டுமனை பட்டா கேட்டு ஆட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் போராட்டம்

அருந்ததியினருக்காக வழங்கப்பட வேண்டிய இலவச வீட்டு மனைப் பட்டா வழங்காததைக் கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். 



கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் பகுதியில் 60,000க்கும் மேற்பட்ட அருந்ததியர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடில்லாத ஏழை அருந்ததிய மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கக் கோரி பலமுறை மனு கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கபப்படவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், இவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து உள்ளதாகவும், சட்டத்திற்கு புறம்பாக நிலத்தை வேறு சிலருக்கு வழங்கப்பட்டு உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். 

எனவே, விவசாய மற்றும் வீடு கட்டுவதற்கு தேவையான நிலத்தை வழங்க வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.



இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆதித்தமிழர் கட்சியின் பொதுச் செயலாளர் வெண்மணி கூறியதாவது: நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் 1000 ஏக்கர் நிலத்தை தொண்டாமுத்தூர் பகுதியில் அரசாங்கம் கையகப்படுத்தியுள்ளது. அதில், தொண்டாமுத்தூர் பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்துவரும் அருந்ததியர் மக்களுக்கு பட்டா பிரித்து கொடுக்க வேண்டும். இதுகுறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்குமேலும் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் தவறினால் மேற்குறிப்பிட்ட இடத்தை கையகப்படுத்தி போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தார்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...