தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தல்கள் ரத்து



தி.மு.க. தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதி மன்றத்தில் அதிரடி உத்தரவு தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தலில் பழங்குடியினருக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என தொடரப்பட்ட வழக்கை இன்று விசாரித்த சென்னை ஐகோர்ட்டு வரும் 17 மற்றும் 19-ம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த உள்ளாட்சி தேர்தல்களை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை: தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தலில் பழங்குடியினருக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படாததை எதிர்த்து தி.மு.க.வை சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.எஸ். பாரதி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி கிருபாகரன் வரும் 17 மற்றும் 19-ம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த உள்ளாட்சி தேர்தல்களை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்ட மூன்று அரசாணைகளும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றும் குறிப்பிட்ட நீதிபதி அந்த மூன்று அரசாணைகளையும் ரத்து செய்வதாகவும் அறிவித்தார். வரும் டிசம்பர் மாதம் 30-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் எனவும் அவர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...