வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் கடன் விண்ணப்பம் இனி இணையதளத்தில் பதிய வேண்டும்!

ஊரக தொழில்துறை அமைச்சர் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதியன்று வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (யூ.ஓய்.இ.ஜி.பி) கடன் விண்ணப்பத்தினை இணையதளம் வாயிலாக மனுதாரர்களே நேரடியாக பதிவற்றம் செய்யும் வசதியை துவக்கி வைத்துள்ளார். இத்திட்டத்தில் விண்ணப்பிக்கும் பயனாளிகள் www.msmeonline.tn.gov.in/uyegp/ என்ற இணையதள முகவரியில் தங்கள் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும்.

பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து அத்துடன் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, குடும்ப மாற்றுச் சான்றிதழ், கல்வி சான்றிதழ், ஜிஎஸ்டி எண்ணுடன் கூடிய விலைப்பட்டியல், திட்ட அறிக்கை, ரூபாய் இருபது முத்திரை தாளில் சான்றுறுதி அலுவலர் முன்னிலையில் ஏற்ற உறுதிமொழி பத்திரம் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல் உள்ளிட்ட இரு நகல்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

மேற்கண்ட இணையதளம் மூலமாக பதிவேற்றம் செய்யப்படாத யூ.ஓய்.இ.ஜி.பி விண்ணப்பங்கள் நேர்முக தேர்விற்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி தொழில்களை அதிகபட்சம் ரூ.10 லட்சம் முதலீட்டிலும், சேவைத் தொழில்களை அதிகபட்சம் ரூ.3 லட்சம் முதலீட்டிலும், வியாபார தொழில்களை அதிகபட்சம் ரூ.1 லட்சம் முதலீட்டிலும் தொடங்கலாம். மேற்கண்ட மனுதாரர்களுக்கு மாநில அரசால் 25 சதவிகிதம் மானியம் அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் வழங்கப்படும்.

ஆர்வமுள்ள தொழில்முனைவோர்கள் யூ.ஓய்.இ.ஜி.பி திட்டத்தில் பயன்பெற்று சொந்தமாக தொழில்கள் துவங்கி பொருளாதார வளம் பெற்று வாழ முன்வருமாறு கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் அழைப்பு விடுத்துள்ளார்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...