தொண்டாமுத்தூரில் புதிய அரசு கலை கல்லூரியை நாளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைக்கிறார்

கோயம்புத்தூர் மாவட்டம், தொண்டாமுத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அப்பகுதி மக்களின் நீண்ட கால வேண்டுகோளை ஏற்று புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சீரிய முயற்சியால், தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவின்படி நாளை ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்படவுள்ளது. நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை துவக்க வைத்து பேரூரையாற்றுகிறார். 

தொண்டாமுத்தூர் பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று  புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (பாரதியார் பல்கலைகழக உறுப்புக்கல்லூரி) துவக்கப்படவுள்ளது. அப்பகுதி மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக்கல்லூரியில் B.A. (English), B.Com (CA), B.Com (PA), BA Economics, B.Sc Maths ஆகிய பாடப்பிரிவுகளுக்கான வகுப்புகள் அட்மிசன் நடைபெற்று வருகின்றது. உடனடியாக வகுப்புகளும் தொடங்கப்படவுள்ளது. நாளை நடைபெறும் இனிய விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்;, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பாரதியார் பல்கலைகழக துணைவேந்தர், ஆகியோர் வாழ்த்துறை வழங்கவும், அரசு அலுவலர்கள், ஆசிரிய பெருமக்கள், மாணவ, மாணவியர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்கள். 

எனவே, தொண்டாமுத்தூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த மாணவ மாணவியர்களும், பொதுமக்கள், கல்வியாளர்கள் திரளானோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்குமாறும். மேலும், இந்த கல்வி ஆண்டிலேயே, தானியார் கல்லூரிகளில் சேர்ந்துள்ள மாணவ மாணவியர்களும் இப்புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்ந்து பயனடையலாம்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...