கோவையில் சிறப்புப் பிரார்த்தனைகளுடன் நீர்நிலைகள் அருகே ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்

ஆடி பெருக்கு, ஆடி மாதத்தின் 18-வது நாளில் கொண்டாடப்படும் திருவிழாவாகும். இந்த திருநாளன்று நீர் நிலைகள் அருகே வாழ்க்கைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சிறப்புப் பூஜைகள் நடைபெறும். இந்த சிறப்பு வழிபாட்டின் போது பொதுமக்களுக்கு எவ்வித சிரமங்களும் ஏற்படாத வகையில் புனித நதிகளுக்கும், குளங்களுக்கும் அருகே கட்டடைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. காவிரி நதி மற்றும் அதன் கிளைகளான பவானி மற்றும் நொய்யல் ஆகியவற்றில் உள்ள அனைத்து ஆலய புனித ஆறுகளிலும் இந்த விழா மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடப்படும்.



ஆடி 18 இந்த புனித நாளன்று, பாரம்பரிய முறையில் புதிதாக திருமணமானவர்கள் ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான திருமண வாழ்வினை மேற்கொள்ள அம்மனுக்கு பிரார்த்தனை செய்கிறார்கள். ஒரு பாரம்பரிய நடைமுறையில், அந்த தம்பதியினர் கூட்டாக தங்கள் திருமண மாலைகளை புனிதமான ஆறுகள் அல்லது குளங்களில், கோவில்களில் விட்டு விடுகின்றனர். 



சிலர், தங்களது முன்னோர்கள், உயிரிழந்த குடும்பத்தினர்களை வழிபடும் வகையிலும் கோவில் ஆறு, குளங்களில் இன்றைய தினம் வழிபடுவர். அப்போது, இலை மீது முறுக்கு, லட்டு உள்ளிட்ட காரம் மற்றும் இனிப்புகளை படையலிட்டு சிவப்பு நிற துணியுடன் கூடிய கருப்பு வளையல்கள் ஆகியவற்றை உயிரிழந்தோர் நினைவாக நதிநீரில் விட்டுச் செல்வர்.



Newsletter

கோவையில் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவுக்கு இறுதி வாய்ப்பு; ஜூலை 31-க்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தல்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3.97 லட்சம் பயனாளிகள் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவு செய்யாமல் நிலுவையில் உள்ளனர். ஜூலை 31, 20...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...