பயிர் காப்பீட்டு திட்டத்தை தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதை கைவிடக் கோரி விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம்

கோவையில் விவசாய பயிர் காப்பீட்டுத் திட்டத்தை தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதை கைவிடக்கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஏர்கலப்பையில் மனிதர்களை பூட்டி தார் சாலையில் உழும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஏர்கலப்பையில் மனிதர்களை பூட்டி தார் சாலையில் உழும் நூதன போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் இன்று ஈடுபட்டனர். அப்போது விவசாய பயிர் காப்பீட்டுத் திட்டத்தை தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதை கைவிட வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தினார்.

தமிழகத்தில் கடும் வறட்சி நிலவும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டில் கடன் வழங்குவதை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும், கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் மட்டுமே பயிர் கடன் வழங்க வேண்டுமென விவசாயிகள் தெரிவித்தனர்.

விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி தனியார் நிறுவனங்களிடம் இது ஒப்படைக்கப்பட்டால், போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து விவசாயிகள் கோரிக்கை மனுவினை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...