பன்னீர்செல்வம் அணியில் இருந்து ஆறுக்குட்டி விலகியது அதிமுக ஒன்றுசேர்வதை காட்டுகிறது -மக்களவை துணை சபாநாயகர் பேச்சு



கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி நேற்று ஒ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து விலகியது அதிமுக ஆட்சியையும் பாதுகாக்கவும், இரட்டை இலை சின்னத்தை மீட்கவும் கருத்து வேறுபாடுகளை மறந்து அதிமுகவினர் ஒன்றுசேர்வதை காட்டுவதாக அக்கட்சியின் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

அதிமுக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து விலகியது தொடர்பான கேள்விக்கு, அதிமுக ஆட்சியையும் பாதுகாக்கவும், இரட்டை இலை சின்னத்தை மீட்கவும் கருத்து வேறுபாடுகளை மறந்து அதிமுகவினர் ஒன்றுசேர்வதை காட்டுகிறது என பதிலளித்தார். மேலும் ஆறுக்குட்டி அந்த அணியில் விலகியதற்கு எந்த நிர்பந்தமும் இல்லை எனவும், அதிமுகவில் பிளவு என்பதே கிடையாது எனவும் கூறிய அவர், 124 சட்டமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.

அமைச்சர் விஜயபாஸ்கர் குறித்து பாராளுமன்றத்தில் குரல் எழுப்பப்பட்டது தேவையற்றது எனவும், தமிழகம் வளர்ச்சி பாதையில் சென்று வந்தாலும் சிலர் தவறான கருத்துக்களை பரப்பி வருவதாகவும் அவர் தெரிவித்தார். நடிகர் கமல்ஹாசனின் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான கேள்விக்கு, ஊழல் என்பதை நிருபிக்க வேண்டுமெனவும், ஆதாரம் இல்லாமல் சொல்லக்கூடாது எனவும் பதிலளித்தார். மேலும் நாடு முன்னேற பொது வாழ்க்கைக்கு நடிகர் கமலஹாசன் வருவதை வரவேற்பதாக அவர் தெரிவித்தார். அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகார் தொடர்பான கேள்விக்கு, கர்நாடக அரசு அமைத்துள்ள விசாரணைக்குழு விசாரணையில் உண்மை வெளிவரும் என பதிலளித்தார்.

Newsletter

கோவையில் பார் ஊழியரை கத்தியால் மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது

கோவை புலியகுளம் ரோடு பங்கஜாமில் ரோடு பகுதியில் உள்ள சன்ரிச் 11 - 11 பாரில் ஊழியர் பாண்டியராஜனிடம் இலவச மதுபானம் கேட்டு ம...

கோவை தடாகம் சாலையில் ஆம்புலன்ஸ் பணிமனையில் தீ விபத்து

கோவை தடாகம் சாலையில் உள்ள கோயில்மேடு அருகே ஆம்புலன்ஸ் பணிமனையில் திடீரென தீ பரவியது. இதனால் கரும்புகை மேகங்களாக சுற்றுவட...

கோவையில் 5வது தென்னிந்திய குலாலர் இன அரசிதழ் அதிகாரிகள், வழக்கறிஞர்கள் கலந்தாய்வுக் கூட்டம்

கோவை செல்வபுரம் பகுதியில் 5வது தென்னிந்திய அளவிலான குலாலர் இன அரசிதழில் பதிவு பெற்ற அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்களின் க...

கோவையில் கத்திமுனையில் சமையல் மாஸ்டர், சாலையோர வியாபாரி, மெடிக்கல் பிரதிநிதியிடம் வழிப்பறி – மூவர் கைது

கோவையில் ஒரே நாளில் நடந்த மூன்று கத்திமுனை மிரட்டல் கொள்ளை சம்பவங்களில் போலீசார் மூவரை கைது செய்தனர். வடமதுரையில் மெடிக்...

கோவையில் அடுத்தடுத்து 2 பைக்குகள் திருட்டு: போலீசார் தீவிர விசாரணை

கோவை மாநகரப் பகுதியில் வீடுகளின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 பைக்குகள் அடுத்தடுத்து மர்ம நபர்களால் திருடு போயுள்ளன...

கோவை மேற்கு மண்டலத்தில் ரூ.11.87 கோடி வளர்ச்சிப் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் ரூ.11.87 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்தி...