தம்பதிகளுக்கு உடல்பருமன் கருவுறுவதைத் தாமதமாக்கும் - நோவா ஃபெர்டிலிட்டி சென்டரின் ஆலோசகர் டாக்டர். லதா தகவல்

ராமன் (34), அவரது மனைவி சங்கீதா (30) இருவரும் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) திருமணம் ஆகி நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தை பெறுவது குறித்து திட்டமிட்டனர். ஆறு மாதம் தாம்பத்தியத்திற்குப் பிறகும் கருத்தரிக்காதது குறித்து வியப்படைந்தனர். சங்கீதாவின் நெருங்கிய தோழி கருத்தரிப்பு சிகிச்சை நிபுணரைக் கலந்து ஆலோசிக்கும்படி ஆலோசனை கூறினார். அதன்படி நோவா ஐவிஐ ஃபெர்டிலி சென்டரின் மருத்துவ ஆலோசகர் டாக்டர் லதாவிடம் சென்று ஆலோசனை கேட்டனர். ராமனின் உடலில் கொழுமியம் அளவு பரிசோதிக்கப்பட்டது. அவர் ராமனும், சங்கீதாவும் பல்வேறு பரிசோதனைகளை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தினார். அதையடுத்து சங்கீதாவின் உடல் சாதாரண நிலையில் இருந்தது தெரியவந்தது. ஆனால், ராமனின் விந்தணு எண்ணிக்கையும் அதன் திறனும் குறைவாக இருந்தது தெரியவந்தது. இதற்கு அவரது உடல் பருமன் ஒரு காரணமாக இருக்கலாம் எனக் கண்டறியப்பட்டது.



ராமன், சங்கீதா ஆகியோரைப் போல பல பேருக்கு இந்த சிக்கல் கோயம்புத்தூரிலும் தமிழ்நாட்டின் பல இடங்களிலும் இந்தக் காலத்தில் பரவலாக இருக்கிறது. 2014-15 ஆம் ஆண்டுக்கான நான்காவது தேசிய குடும்பநல புள்ளிவிவரத்தின்படி உடல் பருமன் அளவு ஆண்கள், தமிழ்நாட்டில் பெண்களிடம் கடந்த பத்தாண்டுகளில் 10 சதவீதம் அதிகரித்திருப்பதாக தெரியவந்துள்ளது. அந்தப் புள்ளி விவரத்தின்படி தமிழ்நாட்டில் 15 முதல் 49 வயது வரையிலானோரில் 30.9 சதவீதம் பெண்களும் 28.2 சதவீதம் பெண்களும் உடல் பருமன் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. இது 2005-06 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட 3ஆவது புள்ளி விவரத்தை விட மிகவும் அதிகமாகும். பெண்களிடையே 20.9 சதவீதமும் ஆண்களிடையே 14.5 சதவீதமும் அதிகம் காணப்படுகிறது.

கோவையில் உள்ள நோவா ஐவிஐ ஃபெர்டிலிட்டி மையத்தின் கருத்தரிப்பு ஆலோசகர் டாக்டர் வி. லதா கூறுகிறார்: “நோவா ஐவிஐ ஃபெர்டிலிடி மையத்திற்கு சிகிச்சைக்காக கடந்த ஓராண்டில் வந்தவர்களில் 30 முதல் 35 வயது வரையிலான இளம் தம்பதியரிடையே ஆண்களிடமோ பெண்களிடமோ அல்லது இருவரிடமோ உடல்பருமன் நிலை 22 சதம் இருப்பது தெரியவந்துள்ளது. உடல் நிறை குறியீட்டு அளவு 25 என்பதை விட அதிகமாக இருக்கிறது. இது கருவுறும் வாய்ப்பைக் குறைக்கிறது. மறு உற்பத்திக்கான உதவிகளின் மூலம் அது சரிசெய்யப்படுகிறது.

உடல் பருமனும் கருவுற இயலாத தன்மையும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை. உடல் பருமனுள்ள பெண்களிடம், அதிக எடையுள்ள பெண்களிடமும் சினைமுட்டை வளர்ச்சி வெளியேற்றுவது முறையாக நடைபெறாது என ஆராய்ச்சி தெரிவிக்கிறது. இதனால், கருவுறும் வாய்ப்புள்ள பருவத்திலேயே குழந்தைப் பேறு இயலாமல் போகிறது. உடல் பருமன் ஹார்மோன் பிரச்சினைகளையும் ஏற்படுத்தும், இதனால் கருவுறுதல் பாதிக்கப்படும். ஹார்மோன் பிரச்சினை கருப்பையில் இருந்து முட்டையை வெளியேற்றுவதையும் பாதிக்கும். அத்தகைய சமயத்தில் இன்சுலின் சுரப்பதையும் பாலிசிஸ்டிக் சினைப்பை நோய்க்குறியையும் பாதிக்கும். ஆண்களுக்கு உடல் பருமன் விந்தணு எண்ணிக்கை குறைய வழி வகுக்கும். ஆண்கள் சதை போட்டால் ஆண்மை இயக்குநீர் எனப்படும் ஒருவித ஹார்மோனுக்கு பாதிப்பு நேரும். விதைப்பைத் தூண்டுதல், விந்தணு உற்பத்தி ஆகியவையும் குறையும்” என்றார்.



“அப்படியே கருத்தரித்தாலும், ஹார்மோன் பிரச்சினை காரணமாகவும் இதர பிரச்சினைகளாலும் கருச்சிதைவு நேரும் அபாயம் உண்டு. அதனால், எங்களது நோயாளிகள் சத்தான ஆரோக்கியமான உணவை சாப்பிடும்படியும் முறையான உடற்பயிற்சியை மேற்கொள்ளவும் அறிவுறுத்துகிறோம். இதனால், ஆரோக்கியமான உடல்நிலையை அவர்கள் பெறுவர். கருத்தரிப்பதும் சுமுகமாகும். எடைக் குறைப்பு எப்போதுமே நல்லது. இது கருத்தரிப்பை அதிகரிக்கும். எந்த வயதிலும் கருத்தரிக்க இயலும். ஐயுஐ அல்லது ஐசிஎஸ்ஐ போன்ற ஐவிஎஃப்  சிகிச்சை முறைகளுக்கு முன்பாக எடையைக் குறைக்கும்படி ஆலோசனை கூறுகிறோம். அவர்கள் மட்டுமின்றி அவர்களது குழந்தைகளும் அதிக எடையின்றி வளர்வதை உறுதி செய்யும்படி அறிவுறுத்துகிறோம்” என்றார் டாக்டர் லதா.

எடையை அவ்வப்போது சரிபார்த்துக் கொள்வது இதர ஆபத்தான நோய்களைத் தவிர்ப்பது மட்டுமின்றி, கருத்தரிக்கும் திறனையும் பாதுக்காக்கும். எனவே, ஆண்களும் பெண்களும் சில குறிப்பிட்ட முறையான உடற்பயிர்சியுடன் சமவிகிதமான உணவை எடுத்துக் கொண்டு, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வது அவசியம். அதுதான் ஆரோக்கியமான பெற்றோர்களாக வேண்டும் என்ற கனவை நிறைவேற்றும்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...