கோவையில் கேட்பாரற்று கிடந்த இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கோவையில் உள்ள 'பைக் பார்க்கிங்'-களில் பல்வேறு இருசக்கர வாகனங்கள் கேட்பாரற்று நிறுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறு, நீண்டகாலமாக உரிமை கோராமல் நிறுத்தப்பட்ட வாகனங்களை போலீசார் இன்று பறிமுதல் செய்துள்ளனர்.

அதன்படி, பீளமேடு போலீசார் இன்று ஃபன்மால் வணிக வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் அங்கு 17 இருசக்கர வாகனங்கள் நீண்டகாலமாக கேட்பாரற்று கிடப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதேபோல், மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான பார்க்கிங்கில் இருந்து 4 வாகனங்களை சாய்பாபாகாலனி போலீசார் பறிமுதல் செய்தனர்.

நீண்டகாலமாக உரிமை கோரப்படாமல் நிறுத்தப்பட்ட இந்த வாகனங்களின் பதிவெண்களைக் கொண்டு, அவை திருடப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சங்க கால கடம்ப மரத்திலிருந்து மருத்துவ குணமுள்ள கடம்பின் பிரித்தெடுக்கும் முறைக்கு காப்புரிமை

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்ட கடம்ப மரத்திலிருந்து க...

திருப்பூர்: அமராவதி அணை 45.8 அடியாக உயர்வு; திருமூர்த்தி 32.95 அடி பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை ஜூலை 9ஆம் தேதி இன்று 45.8 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளது. வினாடிக்கு 297 கன அடி நீர்வ...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: தென்மேற்கு பருவமழை காரணமாக நீர் வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அத...

தேசிய இணைய பரிமாற்ற மையத்தில் இணைய நிர்வாக பயிற்சிக்கு SRIT மாணவி தேர்வு

கோயம்புத்தூர் Sri Ramakrishna Institute of Technology மாணவி ஷாலினி ஏ., புது தில்லி தேசிய இணைய பரிமாற்ற மையம் (NIXI) வழங்...

விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்றவர் கைது - கோவை குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

அரசு வழங்கிய பட்டியலினருக்கான விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்து ஏமாற்றியதாக எழுந்த புகாரில், கவுண்டம்பாள...

கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராக 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்துள்ளத...