நகைப்பட்டறை அதிபரை காரில் கடத்தி 100 பவுன் நகைகள் கொள்ளையடித்த மர்ம நபர்கள்

கோவை தெலுங்குபாளையம் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவர் நகைப்பட்டறை வைத்துள்ளார். உதகையில் உள்ள ஒர் தனியார் நகைக்கயில் இருந்து தங்கக் கட்டிகளை வாங்கிவந்து அவர்கள் கூறும் டிசைனுக்கு நகைகளாக செய்து கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று காலை அதேபோல 850 கிராம் (100 பவுன் நகைகள்) டிசைன் நகைகளை செய்த அவர் உதகைக்கு கொண்டு செல்ல கோவை சாய்பாபா காலனியில் உள்ள புதிய பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது, டாக்சியில் வந்த மர்மநபர்கள் உதகைக்கு செல்வதாகவும், யாராவது வருகிறீர்களா என்று கேட்டு உள்ளனர்.

உடனே இவர் காரில் ஏறி உதகைக்கு சென்று விடலாம் என்று கருதி அந்த டாக்சியில் ஏறி டிரைவர் சீட்டிக்கு பின்னால் அமர்ந்துள்ளார். ஏற்கனவே அந்த டாக்சியில் டிரைவர் தவிர 2 பேர் இருந்துள்ளனர். சிறிது தூரத்தில் மீண்டும் அந்த காரில் ஒருவர் ஏறியுள்ளார். இந்த கார் பெரியநாயக்கன்பாளையம் வரும்போது, காரில் இருந்த ஒருவர் மருந்து கடைக்கு செல்ல வேண்டும் என்று கூற கார் நிறுத்தப்பட்டுள்ளது. 

மருந்து மற்றும் தண்ணீர் வாங்கிய அந்த நபர் காரில் ஏற கார் மீண்டும் ஓட துவங்கியுள்ளது. ஒன்னிபாளையம் அருகே வரும்போது, காரில் இருந்தவர் பாத்ரூம் போக வேண்டும் என்று கூற கார் ஒன்னிபாளையம் ரயில்வே பாலத்தில் அடியில் நிறுத்தப்பட்டது. உடனே கார் கண்ணாடிகளை ஏற்றிய நபர்கள் ஈஸ்வரனிடம் உன்னிடம் இருக்கும் பணத்தை கொடு இல்லையென்றால் கத்தியால் உன்னை குத்திவிடுவோம் என்று மிரட்ட, அவர் என்னிடம் எதுவும் இல்லை என்று கூறியுள்ளதாக தெரிகிறது. இருந்தாலும் அவர்கள் உனது பேண்ட் மற்றும் சட்டையில் என்ன இருக்கிறது என்று சோதனை செய்ய வேண்டும் என்று சோதனை செய்த போது இவரிடம் இருந்த 100 பவுன் நகைகளை எடுத்துள்ளனர்.

மேலும் இவரது செல்போன் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் எடுத்து விட்டு இதனை யாராவதிடம் கூறினால் உன்னை கொன்று விடுவேன் என்று கூறி விட்டு அவர்கள் தப்பி சென்றுள்ளனர். அதன்பின் ஈஸ்வரன் அங்கிருந்து பேருந்து நிறுத்தம் வரை சென்று அங்கிருந்த ஒருவரிடம் போனில் தனது மகனுக்கு தகவல் கொடுத்து வரவழைத்தார். அதன்பின் பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் ஸ்டேசன் சென்று புகார் கொடுத்தன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காரில் கடத்தி 100 பவுன் நகைகளை கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...