அடியாட்களை வைத்து மிரட்டும் பைனான்சியல் நிறுவனத்தின் மீது நடவடிக்கை கோரி சிங்காநல்லூர் பகுதி மக்கள் ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம், சிங்காநல்லூரில் செயல்பட்டு வரும் ஜனலட்சுமி பைனான்சியல் சர்வீசஷ் லிமிட் என்ற தனியார் நிறுவனம் பணத்தை கட்டச் சொல்லி வீட்டிற்கு வந்து அடியாட்களைக் கொண்டு மிரட்டுவதாக காங்கேயம்பாளையம் பகுதி மக்கள் சுமார் 18 பேர் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 



இதுகுறித்து அவர்கள் வழங்கியுள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது:-

சிங்காநல்லூர் அடுத்த காங்கேயம்பாளையம் பகுதியில் வசித்து வரும் நாங்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக ஜனலட்சுமி பைனான்சியல் சர்வீசஷ் லிமிட் என்ற தனியார் நிறுவனத்திடம் தொழில் துவங்க பணம் பெற்றோம். இந்நிலையில், இந்நிறுவனத்தின் உரிமையாளர் ரமேஷ் ராமநாதன் திடீரென இறந்துவிட்டார். இதனால், நீங்கள் வாங்கிய கடனை திரும்ப செலுத்த வேண்டாம் என வசூல் செய்யும் நபர்கள் வீட்டிற்கு வந்து கூறினர். மேலும், கடந்த 7 மாதமாக பணம் வசூலிக்க யாரும் வரவில்லை.

இந்நிலையில், அந்த தனியார் நிறுவனத்தில் பணிபுரிவோர் மீண்டும் பணம் வசூலிக்க வந்தனர். வேலையின்றி தவித்துவரும் நாங்கள் உடனடியாக பணம் செலுத்த முடியாத நிலை குறித்து விளக்கியும் அடியாட்களைக் கொண்டு வீட்டிற்கு வந்து மிரட்டிச் செல்கின்றனர். நாங்கள் வாங்கிய கடனை சிறிது சிறிதாக திருப்பிச் செலுத்த தயாராக உள்ளோம்.

எனவே, மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து நடவடிக்கை மேற்கொண்டு எங்களது வீட்டிற்கு அடியாட்களுடன் வந்து மிரட்டல் விடுத்த ஜனலட்சுமி பைனான்சியல் சர்வீசஷ் லிமிட் கிளை அலுவலர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் வழங்கியுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...