சேரி பிகேவியர் என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்கு நடிகர் கமலஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும்- புதிய தமிழகம் கட்சி டாக்டர் கிருஷ்ணசாமி



சேரி பிகேவியர் என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்கு தனியார் தொலைக்காட்சி நிர்வாகமும், நடிகர் கமல்ஹாசனும் பொறுப்பேற்று மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், மொழி, இனம், சாதி, பொருளாதார ஏற்றத்தாழ்வு அடிப்படையில் தாழ்வுபடுத்தி பேசக்கூடாது என்ற பொதுவான நியதி இருந்தாலும், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒருவர் சேரி பிகேவியர் என்ற வார்த்தையை பயன்படுத்தியது தவறு. இந்தியாவில் சில மக்கள் சேரியில் வாழும் சூழலை ஏற்படுத்தியதற்கு மேல்தட்டு வர்க்கத்தினர் வெட்கப்பட வேண்டுமே ஒழிய, அவமானப்படுத்தக் கூடாது. இதற்கு தனியார் தொலைக்காட்சி நிர்வாகமும், நடிகர் கமல்ஹாசனும் பொறுப்பேற்று மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும்.

நடிகர் கமல்ஹாசன் அனைத்து துறைகளிலும் ஊழல் இருப்பது குறித்த பத்திரிகையாளர் கேள்விக்கு, நடிகர் கலம்ஹாசன் ஊழல் குறித்து ஆதாரத்துடன் பேச வேண்டும். ஊழல் புகார் தொடர்பாக ஆதாரம் கொடுக்க வேண்டியது அவரது பொறுப்பு. 

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்தின் வெற்றி என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று. துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் கோபால கிருஷ்ணகாந்திக்கு அனைவரும் ஆதாரவு கொடுத்தால் தவறல்ல'  என டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

Newsletter

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...