சேலம் இதழியல் மாணவி மீது வழக்கு - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் கண்டனம்


ஹைட்ரோகார்பன், மீத்தேன் உள்ளிட்ட மக்கள் விரோத திட்டங்களை எதிர்த்து மக்கள் மத்தியில் துண்டுபிரசுரங்களை வழங்கிய சேலம் இதழியல் மாணவி மீது வழக்கு பதிந்திருப்பதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் தனது கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நெடுவாசல் மற்றும் கதிராமங்கலம் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாகவும், மத்திய, மாநில அரசுகளின் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எடுக்கும் மக்கள் விரோத திட்டத்திற்கு எதிராகவும் துண்டுப் பிரசுரங்களை மாணவர்கள் மத்தியில் விநியோகித்த பொழுது, இதழியல் படித்து வரும் கல்லூரி மாணவி வளர்மதி மற்றும் ஜெயந்தி ஆகிய இருவரையும் கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் சேலம் போலீசார் கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்கு உரியதாகும்.

ஜனநாயக அரசியல் அமைப்பில் மக்களுக்கும், தேச நலன்களுக்கும், அரசியல் சட்டத்திற்கும் எதிராக மத்திய மாநில அரசுகள் செயல்படுகிறபோது அதை, வாக்களித்த மக்களின் கவனத்திற்குக் கொண்டு செல்கிற உரிமை, ஒவ்வொரு பிரஜைக்கும் உண்டு. இது அரசியல் சாசன ரீதியிலான உரிமையாகும். இதற்கு எதிராக போலீசார் இரண்டு பெண்களையும் கைது செய்து வழக்கு பதிவு செய்திருப்பது சட்டவிரோதமான அத்துமீறலாகும்.

அவர்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெற்று உடனடியாக அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுவின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்" என்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை–போத்தனூர் இடையே பராமரிப்பு பணி: செப்.25, 26-ல் இரு மெமு ரயில் சேவையில் மாற்றம்

செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற...

கோவையில் பார் ஊழியரை கத்தியால் மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது

கோவை புலியகுளம் ரோடு பங்கஜாமில் ரோடு பகுதியில் உள்ள சன்ரிச் 11 - 11 பாரில் ஊழியர் பாண்டியராஜனிடம் இலவச மதுபானம் கேட்டு ம...

கோவை தடாகம் சாலையில் ஆம்புலன்ஸ் பணிமனையில் தீ விபத்து

கோவை தடாகம் சாலையில் உள்ள கோயில்மேடு அருகே ஆம்புலன்ஸ் பணிமனையில் திடீரென தீ பரவியது. இதனால் கரும்புகை மேகங்களாக சுற்றுவட...

கோவையில் 5வது தென்னிந்திய குலாலர் இன அரசிதழ் அதிகாரிகள், வழக்கறிஞர்கள் கலந்தாய்வுக் கூட்டம்

கோவை செல்வபுரம் பகுதியில் 5வது தென்னிந்திய அளவிலான குலாலர் இன அரசிதழில் பதிவு பெற்ற அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்களின் க...

கோவையில் கத்திமுனையில் சமையல் மாஸ்டர், சாலையோர வியாபாரி, மெடிக்கல் பிரதிநிதியிடம் வழிப்பறி – மூவர் கைது

கோவையில் ஒரே நாளில் நடந்த மூன்று கத்திமுனை மிரட்டல் கொள்ளை சம்பவங்களில் போலீசார் மூவரை கைது செய்தனர். வடமதுரையில் மெடிக்...

கோவையில் அடுத்தடுத்து 2 பைக்குகள் திருட்டு: போலீசார் தீவிர விசாரணை

கோவை மாநகரப் பகுதியில் வீடுகளின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 பைக்குகள் அடுத்தடுத்து மர்ம நபர்களால் திருடு போயுள்ளன...