சிஆர்பிஎப் துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் அத்துமீறி நுழைந்ததாக 3 பேர் மீது வழக்கு

கோவை மாவட்டம், துடியலூர் பகுதியில் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையின் துப்பாக்கிச் சுடும் பயிற்சி தளம் உள்ளது. இங்கு நேற்று கேரளாவில் இருந்து வந்த மூன்று பேர் வழிதவறி உள்ளே நுழைந்துள்ளனர். அப்போது அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த சிஆர்பிஎப் படை வீரர்கள் இவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது இவர்கள், மலப்புரத்தினைச் சேர்ந்த பனிஸ் (21), அர்ஷத் (20) மற்றும் எர்ணாகுளத்தினை சேர்ந்த தாமஸ் (20) என்பது தெரியவந்துள்ளது. வழிதவறி இங்கே வந்துவிட்டோம் என விளக்கம் அளித்த நிலையிலும் இவர்கள் மூவரும் மாவோயிஸ்ட் அமைப்பினைச் சேர்ந்தவர்களா என்ற கோணத்தில் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து, அவர்களை துடியலூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்த நிலையில், மூவரிடமும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அவர்கள் சிஆர்பிஎப் துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் வழி தவறி நுழைந்தது உறுதிசெய்யப்பட்டது.

இருப்பினும், பாதுகாப்புப் படைத் தளத்தில் நுழைந்தமைக்காக அத்துமீறி நுழைந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...