மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் படித்த 12-ம் மாணவி உடல் கருகி பலி: கோவையில் சோகம்

கோவை க.க.சாவடி பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினசாமி (49). இவரது மகள் தனலட்சுமி (17). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 1-ம் தேதி வீட்டில் மின்சாரம் இல்லாததால் மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் படித்துக் கொண்டிருந்தார்.  விளக்கில் மண்ணெண்ணெய் தீர்த்துவிட, அதில் மண்ணெண்ணெய் நிரப்பியுள்ளார். அப்போது தவறுதலாக மண்ணெண்ணெய் தனலட்சுமியின் உடல் மீது விழுந்துள்ளது. இதை கவனிக்காத அவர், மண்ணெண்ணெய் விளக்கை கொளுத்தியுள்ளார். அப்போது பரவிய தீ தனலட்சுமியின் உடல் முழுவதுமாக பற்றி எரிந்துள்ளது. தனலட்சுமியின் கூச்சல் சத்தத்தை கேட்ட அப்பகுதி மக்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

உடல் முழுவதும் 56 சதவிகிதத்திற்கும் மேல் தீக்காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி தனலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ரத்தினசாமி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த க.க. சாவடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...