நிர்மலா கலைக் கல்லூரியில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் முகாம் துவக்கம்

கோவை மாவட்டம் நிர்மலா அறிவியல் கலைக் கல்லூரியில் இன்று (ஜூலை 6) வாக்காளர் பட்டியலில் 18 வயது முதல் 21 வயது நிரம்பிய கல்லூரி மாணவ, மாணவிகள் அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்த்தல் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன் இம்முகாமினை துவக்கி வைத்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது:-



இந்திய தேர்தல் ஆணையம் தகுதி வாய்ந்த வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் அதிகளவில் சேர்த்தல் மற்றும் பிழைகளை நீக்கும் பணிகளை கடந்த ஜூலை 1-ஆம் தேதியிலிருந்து ஜூலை 31-ஆம் தேதி வரை சிறப்புப்பணி நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 

அதனடிப்படையில் இந்த சிறப்புப்பணியை அனைத்து மாநிலங்களிலும் தொடங்கி “எந்த ஒரு வாக்காளரும் விடுப்பட்டுவிடக் கூடாது” என்ற இந்திய தேர்தல் ஆணையத்தின் கருப்பொருளுக்கிணங்க அதிகளவில் இளைய வாக்காளர்களை குறிப்பாக 18-21 வயதுக் குழுமத்ததைச்சார்ந்த வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க தற்போது நடைபெறும் தொடர் திருத்தக் காலத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிடப்பட்டுள்ளது.

இம் மாதம் 1-ஆம் தேதியிலிருந்து 31-ஆம் தேதி வரை நடைபெறும் இச்சிறப்புப்பணியின்போது வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவுலகங்களில் படிவங்ளைச் சமர்ப்பிக்கலாம். அஞ்சல் மூலமும் படிவங்களை அனுப்பலாம். www.electons.tn.gov.in  என்ற இணையதளத்தின் மூலமும், இ-சேவை மையங்களின் மூலமும் இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.

சிறப்புப்பணியில் 09.07.2017 மற்றும் 23.07.2017 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. சிறப்பு முகாம்கள் நடைபெறும் தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குசாவடி நிலை அலுவலர்கள் அமர்ந்து நிரப்பப்பட படிவங்களை பெறுவர்.

இச்சிறப்புப்பணியின்போது, இறந்த வாக்காளர்களின் பெயர்களை பட்டியளிலிருந்து நீக்கும் பணியும் நடைபெறவுள்ளது. இறப்புப்பதிவு செய்யப்பட்ட விவரங்கள் உள்ளாட்சி அலுவலகங்களிலிருந்து பெறப்பட்டு அதனடிப்படையில் இறந்த வாக்காளர்களின் பெயர்கள் பட்டியல்களிலிருந்து  இச்சிறப்புப்பணியின்போது நீக்கப்படும். இந்த அறிய வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ராஜ்குமார், மாநகராட்சி உதவி ஆணையர்கள் ரவிக்குமார், அண்ணாதுரை மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...