அரசியல் ரீதியான கருத்துக்களை எதிர்கொள்ள முடியாமல் சிபிஎம் அலுவலகம் மீது தாக்குதல்- விஎச்பி செயலாளர் கைது

கோவை காந்திபுரத்தில் சிபிஎம் கட்சி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஒரு கிளை பிரிவான விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினைச் சேர்ந்த சரவணக்குமார் என்பவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை மாவட்டம், காந்திபுரம் 100 அடி சாலையில் மார்க்சிஸ்ட்சி கட்சியின் மாவட்டக்குழு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் மீது கடந்த ஜூன் மாதம் 17-ம் தேதியன்று அதிகாலை மர்மநபர்கள் இருவர் பெட்ரோல் குண்டுகளை வீசிச்சென்றனர். அது சிபிஎம் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கபட்டிருந்த கார் மீதும், கட்டிட ஜன்னல் மிதும் விழுந்து வெடித்தது. இதில், பெரிய அளவில் சேதம் இல்லை என்ற போதிலும் சிபிஎம் கட்சியினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதனைத்தொடர்ந்து, வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது, இச்சம்பவம் தொடர்பாக அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சிசிடிவி பதிவுகள் மற்றும் செல்போன் தொலைபேசி உரையாடல் மூலம் குற்றவாளிகளை அடையாளம் கண்ட தனிப்படை பிரிவினர் செவ்வாயன்று (நேற்று) மேட்டுப்பாளையம் பகுதியில் பதுங்கியிருந்த சரவணக்குமார் என்பவரை கைது செய்தனர்.

மேட்டுப்பாளையத்தில் யோகா பயிற்றுனராக பணியாற்றி வரும் இவர், லண்டனில் மென் பொறியாளராக பணியாற்றியுள்ளார். மேலும், ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஒரு கிளை பிரிவான விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் வடக்கு மாவட்ட செயலாளராகவும் செயல்பட்டு வந்தது தெரிய வந்தது.

தொடர்ந்து, விசாரணை மேற்கொள்கையில், அரசியல் ரீதியான கருத்துக்களை எதிர்கொள்ள முடியாத நிலையில், சிபிஎம் அலுவலகம் மீது வன்முறைத் தாக்குதல் நடத்தி பழிதீர்க்க முடிவு செய்து ஒரு குழுவாக இயக்கியிருப்பதும், அந்த குழுவின் செயல்திட்டத்தின் படியே சிபிஎம் அலுவலம் மீது பெட்ரோல் குண்டு வீசியதும் தெரிய வந்திருக்கிறது.

இதையடுத்து பெட்ரோல் குண்டு வீசிய சரவணக்குமாரை செவ்வாயன்று இரவே நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்திய காவல்துறையினர் தொடர்ந்து, அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்து வரும் நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...